பக்கம்:சாவி-85.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் பெரியாரின் இந்த லாஜிக் என்னை மிகவும் கவர்ந்தது. அதோடு நான் விடவில்லை. மேலும் ஒரு கேள்வியைப் போட்டேன். "சரி, இப்ப நாங்க பிராமணர்கள் மாறி வருகிறோம். முற்போக்கா சிந்திக்கிறோம். உதாரணத்துக்கு இங்கே இப்போ நீங்க கொடுத்த காபியை நான் சாப்பிட்டேன். இதுவே சில வருஷங்களுக்கு முன் இந்த மாதிரி ஒரு பிராமணன், வேறு ஜாதிக்காரர் வீட்ல காபி சாப்பிடறதைப் பார்க்க முடியுமா?’’ பெரியார் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. "இப்ப நீங்க காப்பி சாப்பிட்டீங்க இல்லையா? முப்பது வருஷமா நான் பட்டபாடுதானே நீங்க இப்ப சாப்பிட முன் வந்திருக்கீங்க. நான் பேசிப் பேசித்தானே நீங்களெல்லாம் இப்ப மாறிகிட்டு வர்றீங்க?" என்று ஒரே போடாகப் போட்டு என்னை அடுத்து பேச முடியாமல் செய்து விட்டார். பெரியாரிடம் சாவிக்குப் பிடித்தது அவர் பேச்சும் கொள்கைப்பிடிப்பும் மட்டுமல்ல. அவரது அயரா உழைப்பும் சலியா ஊக்கமும் கூடத்தான். - பெரியார் அவர்களிடம் சாவி பேசிக் கொண்டிருந்தபோது கரூரிலிருந்து நாலைந்து பேர் வந்து ஒரு கூட்டத்துக்காக ஐயாவை அழைக்கக் காத்திருந்தார்களாம். பெரியார் கேட்கிறார்: "எப்பய்யா கூட்டம் ஆரம்பிப்பீங்க?" 'ஆறு மணிக்கு." - "ஆறு மணிக்கு வேண்டாம். யாரும் வரமாட்டாங்க. எட்டு மணிக்கு ஆரம்பியுங்க. என்னால ரொம்ப நேரம் பேச முடியாது. ஒரு மணி நேரம் பேசுவேன். 165

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/183&oldid=824520" இலிருந்து மீள்விக்கப்பட்டது