பக்கம்:சாவி-85.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 கொடுத்து விட்டு வந்தார். அதற்கடுத்த சில தினங்களுக்குள் சாவிக்கு வீட்டு மனை அலாட் செய்திருப்பதாகக் கடிதம் வந்து விட்டது. முதல் தவணையாகக் கட்ட வேண்டிய பணம் சாவியிடம் இல்லை. தெரிந்தவர்களிடம் கடன் வாங்கித்தான் கட்ட வேண்டியதாயிற்று. அப்புறம்தான் அண்ணாநகர் ஏ.ஐ. பிளாக்கில் காலி மனை ஒன்று சாவியின் பெயருக்கு ஒதுக்கப் பட்டது. நீண்ட காலத் தவணை முறையில் பணம் கட்டி முடித்து நிலம் சொந்தமாகி விட்ட போதிலும் அதில் வீடு கட்டிக் கொள்ளும் அளவுக்குப் பண வசதி இல்லாததால் அது அப்படியே காலி மனையாகவே கிடந்தது. பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் காங்கிரஸ் ஆட்சி போய் தி.மு.க. ஆட்சி வந்தது. திரு. ராசாராம் வீட்டு வசதி அமைச்சரானார். ராசாராம் சாவிக்கு ஏற்கனவே நெருங்கிய நண்பர். ஆனாலும் ராசாராமிடம் வீட்டு சமாசாரம் பற்றி சாவி எதுவும் பேசவில்லை. காமராஜர் மூலம் சாவிக்கு நிலம் தரப்பட்டதைத் தமிழ்வாணன் மூலம் கேள்விப்பட்ட ராசாராம் அவர்கள் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடு கட்டித் தர அவராகவே முன் வந்தார். ஆனால் முன்பணமாக வீட்டின் கிரயத்தில் நான்கில் ஒரு பாகத்தைக் கட்ட வேண்டும் என்ற ஹவுஸிங் போர்ட் விதியைச் சுட்டிக்காட்டி என்னால் இயலாதே' என்றார் சாவி. 'ஏன், உங்க நிலத்தையே அந்தப் பணத்துக்கு ஈடாக வச்சுக்கலாமே, கவலைப்படாதீங்க; அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்' என்று கூறிய ராசாராம் தாம் சொன்னபடியே ஏற்பாடு செய்தார். 'காமராஜ் அவர்கள் தயவால் மனை கிடைத்தது. கலைஞர் ஆட்சியில் வீடு கட்ட முடிந்தது என்று இன்றும் நன்றியோடு நினைவு கூர்கிறார் சாவி. 170

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/188&oldid=824526" இலிருந்து மீள்விக்கப்பட்டது