பக்கம்:சாவி-85.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. காமராஜருக்கு வந்த கோபம் ஒரு நாள் முழுவதும் காமராஜருடனேயே இருந்து "எ டே வித் காமராஜ் பாணியில் ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை எழுதினார் சாவி. அப்போது அவர் டில்லி தமிழ்நாடு இல்லத்தில் காமராஜருடன் தங்குவதற்கு ஏற்பாடாயிற்று. ஒரு நாள் திரு. ஜி.ராஜகோபாலன் எம்.பி., காமராஜரையும், சாவியையும், புகைப்படக் கலைஞர் நடராஜனையும் தம் இல்லத்துக்கு காலைச் சிற்றுண்டிக்கு அழைத்திருந்தார். சாவியும் ராஜகோபாலனும் ஏற்கனவே அலிபுரம் சிறையில் நண்பர்கள் ஆனவர்கள். மாயவரம் நடராஜன் என்பவர் காமராஜரின் நண்பர். சிறந்த புகைப்படக் கலைஞர். நடராஜன் நவகாளி யாத்திரையின்போது சாவியுடன் சென்று புகைப்படம் எடுத்தவர். சாப்பிடத் தொடங்கிய சில நிமிடங்களில் ராஜகோபாலனுக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. 'இன்றைக்குப் பிரதமர் நேருவுடன் தீன்மூர்த்தி பவனில் ஒன்பது மணிக்கு ஒரு மீட்டிங், லால் பகதூர் சாஸ்திரி, ஜகஜீவன்ராம் எல்லோரும் வந்து விட்டார்கள். காமராஜ் அங்கே இருக்கிறாரா? எல்லோரும் அவருக்காகக் காத்திருக்கிறோம். காமராஜர் அங்கே இருந்தால் உடனே வரச் சொல்லுங்கள்' என்று திருமதி இந்திரா காந்தி ஜி.ராஜகோபாலனிடம் பேசினார். 173

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/191&oldid=824534" இலிருந்து மீள்விக்கப்பட்டது