பக்கம்:சாவி-85.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் காமராஜரின் கார் மட்டும் எதையும் பொருட்படுத்தாமல் தீன் மூர்த்தி பவன் நோக்கி வேகமாய்ப் பறந்து கொண்டிருந்தது. வழியில் சற்று தூரத்தில் ஒரு மரத்தடியில் டாக்ஸி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதை தூரத்திலிருந்தே கவனித்து விட்ட காமராஜர் காரை அங்கே நிறுத்தும்படி டிரைவருக்கு உத்தர விட்டார். நடராஜனைப் பார்த்து, "இறங்குங்க. அதோ தெரியுதே, அந்த டாக்ஸி பிடிச்சுப் போய்ச் சேருங்க" என்று கர்ஜித்தார். சாவியும், நடராஜனும் ஒரே பாய்ச்சலில் காரை விட்டு குதித்து ஒடியதும் காமராஜர் கார் மீண்டும் பறந்தது. அந்த அடைமழையில் ஒடிப்போய் டாக்ஸி ஏறுவதற்குள் இருவரும் தெப்பலாய் நனைந்து போனார்கள். நேருஜியுடனான மீட்டிங் முடிந்ததும் பகல் ஒரு மணிக்கு ஜகஜீவன்ராம், மொரார்ஜி தேசாய், காமராஜர் மூவருக்கும் வேறு ஒரு இடத்தில் ஆன்ட்டி கரப்ஷன் மீட்டிங் ஒன்றுக்கு ஏற்பாடாகி இருந்தது. அது முன்கூட்டியே நடராஜனுக்குத் தெரிந்திருந்ததால் ‘எப்படியும் காமராஜர் அங்கே வருவார் என்று அந்தக் கூட்டம் நடக்கும் இடத்துக்கு சாவியும் நடராஜனும் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே வரவேற்புக் கூடத்தில் போய் தலையைத் துவட்டிக் கொண்டு சமர்த்துப்பிள்ளைகளாக உட்கார்ந்து கொண்டார்கள். சரியாக ஒரு மணிக்கு காமராஜர் அங்கே வந்தார். இருவரும் எழுந்து நின்றனர். இரண்டு பேரையும் பார்த்ததும் சிரித்த முகத்துடன் 'இங்கதான் இருக்கீங்களா? இருங்க இருங்க. இதோ மீட்டிங் முடிச்சிட்டு வந்துடறேன். இங்கேயே இருங்க” என்று ரொம்ப ரொம்ப சாந்தமாகச் சொல்லிவிட்டுப் போனார். சாவி சொல்கிறார்: 'சற்று நேரத்துக்கு முன்பு காருக்குள் 'புத்தி இருக்கா - 175

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/193&oldid=824537" இலிருந்து மீள்விக்கப்பட்டது