பக்கம்:சாவி-85.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. ஜெயகாந்தன் அறிமுகம் ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவின் உதவியாளராக பார்த்தசாரதி என்ற இளைஞர் இருந்தார். ஒருநாள் அவர் அங்கே மர அலமாரிக்கு மேல் கிடந்த புழுதி படிந்த புத்தகம் ஒன்றை எடுத்து தூசி தட்டி சாவியிடம் கொடுத்தார். அது சிறுகதைகள் அடங்கிய ஒரு சின்னப் புத்தகம். அதை வாங்கிப் பார்த்த சாவி ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டார். சரஸ்வதி பத்திரிகையில் ஜெயகாந்தன் எழுதி வெளியான சிறுகதைகளின் தொகுப்பு அது. தி.ஜ.ர. அவர்கள் அந்தப் புத்தகத்தில் மிக அழகாக ஒரு முன்னுரை எழுதியிருந்தார். அந்தத் தொகுப்பில் டிரெடில் என்ற கதையைப் படித்த போது சாவி மகிழ்ந்து போனார். கருத்து, நடை எல்லாமே புதிதாக இருந்தது. 'யார் இந்த ஜெயகாந்தன்? இவ்வளவு சுவாரசியமாக எழுதியிருக்கிறாரே, இவரை எப்படியாவது விகடனில் எழுத வைத்து விடவேண்டும் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டார். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. விகடன் என்றாலே அது பிராமணர்கள் பத்திரிகை என்று அப்போது பொதுவாக ஒரு கருத்து நிலவி வந்தது. பிராமணர்கள் அல்லாத வர்களைப் பெருமளவில் விகடனில் எழுத வைப்பதன் மூலம் அந்தக் கருத்தை அழித்துவிட வேண்டும் என்றும் சாவி விரும்பினார். மேலும் விகடனுக்கு ஒரு புது உத்வேகம் தரும் 177

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/195&oldid=824544" இலிருந்து மீள்விக்கப்பட்டது