பக்கம்:சாவி-85.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் நிகழ்ச்சிகள் எதுவானாலும் சாவி கலந்து கொள்ளத் தவறியதில்லை. அந்த அளவுக்கு அவர்கள் குடும்ப நண்பராக இன்றளவும் பழகி வருகிறார். பயனர் ஹவுஸில் தங்கியிருந்த சாவி அவர்களை ஒருமுறை ஜி.டி.நாயுடு தம் வீட்டுக்கு வரும்படி அழைத்திருந்தார். இரண்டு பேரும் வெகு நேரம் பல விஷயங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அன்று நாயுடு அவர்கள் சாவியைத் தம் வீட்டில் உணவருந்த வேண்டும் என்று விரும்பினார். எப்போதுமே குறும்புத்தனமாக எதையும் செய்து கொண்டிருப்பதில் நாயுடுவுக்கு ஆர்வம் அதிகம். 'பிராக்டிகல் ஜோக்ஸ் செய்து நண்பர்களை அழவும் வைப்பார்; சிரிக்கவும் வைப்பார். அன்று சாவி போயிருந்தபோது கோபால் பாக் பங்களாவின் Glassifié 3rouñai 'construction is for destruction' arcăups asp? வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்துவிட்டு எதற்காக இப்படி எழுதி வைத்திருக்கிறீர்கள்?' என்று நாயுடுவிடம் கேட்டார். "அதுவா? இந்த இன்கம்டாக்ஸ்காரர்கள் அடிக்கடி ரெய்ட், கிய்ட் என்று வராங்க. இங்கே ஒண்ணுமில்லை. நீங்க சும்மா வந்து தொல்லை கொடுக்காதீங்கன்னா கேட்கமாட்டாங்க. 'இந்த வீடு முழுதும் சுவர் ஓரங்களில் மின்சார ஒயர்கள் மறைத்து வைத்திருக்கிறேன். இதோ இந்த பட்டனை அழுத்தினாப் போதும் குண்டு வெடித்து வீடே தவிடு பொடியாகி விடும். அதோடு சேர்ந்து நீங்களும் செத்துப் போவீர்கள் என்பேன். அப்படிச் சொன்னால்தான் பயந்து ஓடி விடுவார்கள். வீடு பற்றி எனக்குக் கவலையில்லை. அதனால்தான் இப்படி ஒரு அறிவிப்பு' என்றார் நாயுடு. பின்னர் சாவியின் காதோடு சொன்னார்: "இங்கே குண்டும் இல்லை. ஒரு மண்ணும் இல்லை. சுவர் ஒரங்களில் ஒயர் மட்டும் போட்டு மூடி வைத்திருக்கிறேன்; சும்மா அவங்களைப் பயமுறுத்த...” - 183

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/201&oldid=824559" இலிருந்து மீள்விக்கப்பட்டது