பக்கம்:சாவி-85.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 சாவி சென்ற இடங்களுக்கெல்லாம் ஒவியர் கோபுலு அவர்களும் சென்று வந்தார். அந்தக் காட்சிகளை கோபுலுவின் தூரிகை அப்படியே படம் பிடித்துக் காட்டியதுடன் அவற்றுக்குப் பொருத்தமான ஜோக்குகளையும் இணைத்து இரண்டு பக்கங்களில் தனிக் கச்சேரி செய்திருந்தார். கேரக்டர் கட்டுரைகளில் வரும் ஆசாமிகள் நாம் நமது அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள்தாம். ஆனால் சாவியின் எழுத்து நடையில் அவர்கள் அத்தனை பேரும் நமக்குள் புகுந்து விட்டார்கள் என்றால் மிகையில்லை. விகடனில் அவர் எழுதிய அந்தக் கட்டுரைகளைப் பாராட்டிப் பல இடங்களிலிருந்து கடிதங்கள் வந்துள்ளன. ஆனால் சாவியால் மறக்க முடியாத பாராட்டு ஒன்று உண்டு. அது பேரறிஞர் அண்ணா அவர்களின் பாராட்டுதான். 'வாஷிங்டனில் திருமணம் கடைசி அத்தியாயம் வரை சாவி என்று பெயர் போடாமல் இருந்தது போலவே கேரக்டர் கட்டுரைகளையும் பெயர் போடாமல்தான் எழுதினார். ஆயினும் சாவியின் முத்திரை அதில் பதிந்திருப்பதைப் பல வாசகர்கள் எளிதில் புரிந்து கொண்டு இது சாவிதான் என்றார்கள். கேரக்டர் கட்டுரைகளை அறிஞர் அண்ணா அவர்கள் வாரா வாரம் படித்துவிட்டு 'யார் எழுதுகிறார்கள்? என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் தம் நண்பர் டைரக்டர் ப.நீலகண்டன் அவர்களிடம் கேட்டிருக்கிறார். நீலகண்டன் சாவியின் நீண்டகால நண்பர். - ஒருநாள் சாவி அவர்களை ஃபோனில் அழைத்து, "நான்தான் நீலகண்டன் பேசுகிறேன். கேரக்டர் எழுதறது. நீங்கதானே?" என்று கேட்டார். "ஆமாம், ஏன்?" "இல்லை. அண்ணா அவர்கள் அந்தக் கட்டுரைகளை மிகவும் ரசித்துப் படிக்கிறார். இத்தனை அற்புதமான கட்டுரைகளை யார் 188

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/206&oldid=824569" இலிருந்து மீள்விக்கப்பட்டது