பக்கம்:சாவி-85.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் எழுதுகிறார்கள்?’ என்று என்னிடம் கேட்டார். அந்த எழுத்து நடை, நகைச்சுவை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது அது நீங்களாகத் தான் இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அண்ணா அவர் களிடமும் சொன்னேன். இருந்தாலும் என் யூகம் சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் ஃபோன் செய்தேன். கேரக்டர் போன்ற கட்டுரைகளை எனக்குத் தெரிந்து வேறு எந்த மொழியிலும் நான் கண்டதில்லை என்று அண்ணா அவர்கள் பாராட்டினார்' என்றார் நீலகண்டன். சாவி அவர்களுக்கு இதைக் காட்டிலும் வேறு என்ன பெரிய விருது கிடைக்க வேண்டும்! 189

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/207&oldid=824571" இலிருந்து மீள்விக்கப்பட்டது