பக்கம்:சாவி-85.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 இளமைக் காலத்தில் அவரிடம் இயற்கையாக அமைந்திருந்த நகைச்சுவை உணர்வு எப்படி இருந்ததோ, அது மேலும் மேலும் வளர்ந்து முதிர்ச்சி பெற்றது. அவருடைய துன்பங்களையும், துயரங்களையும், கஷ்டநஷ்டங்கன்ஸ்யும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஓங்கி வளர்ந்து உயர்ந்தது. நான் சென்னையில் இருக்கும்போது சாவியுடன் தொடர்பு கொள்ள நினைப்பேன். சாவி இருக்கிறாரா? இருந்தால் இன்று சாப்பிட வரச் சொல் என்று என் செயலாளர் ரவியிடம் சொல்வேன். 'சாவி அமெரிக்கா போயிருக்கிறார். ஹாங்காங் போயிருக்கிறார் என்பார் ரவி. என் வீட்டிற்குச் சாப்பிட வரும்போதெல்லாம் உணவை ரசித்துச் சாப்பிடுவார். என்னையும், சமையல்காரர்களையும் பாராட்டத் தவற மாட்டார். பாரதியார் சங்கத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சிக்குப் பின்னால் சாவி சில ஆண்டுகள் வரை பொருளாளராக இருந்தார். இப்போது இணைப் புரவலராக இருந்து வருகிறார். என் அழைப்புக்கிணங்க 1986ஆம் ஆண்டு சிலம்புச் செல்வர் ம.பொ.சி., சாவி, பகீரதன் மூவரும் சுவாமி சச்சிதானந்தா அவர்கள் அமெரிக்காவில் நிறுவியுள்ள தாமரைக் கோயில் திறப்பு விழாவுக்கு வந்திருந்தனர். அந்த நாட்கள் மறக்க முடியாத இனிய நாட்கள். அப்போது நான் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு சச்சிதானந்த சுவாமிகளின் ஆசிரமத்தில் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தேன். சாவி அவர்களையும் என்னுடன் தங்கச் செய்து, நானும் அவரும் நாள்தோறும் காலையில் அரை மணி நேரமும், மாலையில் அரை மணி நேரமும் மரங்கள் அடர்ந்த ஆசிரமத்துச் 192

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/210&oldid=824578" இலிருந்து மீள்விக்கப்பட்டது