பக்கம்:சாவி-85.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 படப்பிடிப்பு முடிந்த பின்பு அந்தப் படக்குழு டெல்லி திரும்பியது. எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள் எல்லோரும் காந்தி சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். சாவியிடமும் மலர் வளையம் ஒன்றைத் தந்து காந்தி சமாதி மீது வைக்கச் சொன்னார் எம்.ஜி.ஆர். பிறகு எல்லோரும் சேர்ந்து அங்கே புகைப்படம் எடுத்துக் கொண்ட பின் அசோகா ஒட்டலுக்குத் திரும்பினார்கள். வழியில் டெல்லி கன்னாட் பிளேஸில் திருமதி ஜானகியும், எம்.ஜி.ஆரும் ஒரு நகைக் கடைக்குள் சென்று சில நகைகள் வாங்கினார்கள். ஏற்கனவே சாவியின் குடும்பம் பற்றி எம்.ஜி.ஆர். அக்கறையாகக் கேட்டுத் தெரிந்து வைத்திருந்தார். நகைக் கடையில் ஒரு தங்கச் சங்கிலியை எடுத்து சாவியிடம் காட்டி இதை உங்கள் மகளுக்குப் போடுங்கள் என்றார். சாவி அதை வாங்க மறுத்து விட்டார். 'நான் இப்போது விகடன் சார்பாக வந்திருக்கிறேன். இந்த நேரத்தில் இந்த அன்பளிப்பை ஏற்றுக் கொள்வது முறையல்ல. தங்கள் அன்புக்கு நன்றி என்று அன்பே வா நாயகரிடம் சொல்லி மறுத்து விட்டார். சென்னை வந்து சேர்ந்த பின்பு சாவி சற்று வித்தியாசமான சூழ்நிலையைச் சந்திக்க வேண்டியதாயிற்று. சிம்லா போகும்போது சாவி தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டார் என்ற கோபம் பாலு அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். இதனால் சாவியிடம் அவர் சரியாகப் பேசவில்லை. இது சாவிக்குத் தெரிந்த போது மிகுந்த சங்கடத்திற்கு உள்ளானார். இந்தச் சூழ்நிலையில் 'அன்பே வா அவுட்டோர் ஷல்ட்டிங் பற்றி கட்டுரை எழுதும் மன நிலையில் சாவி இல்லை. என்ன இப்படி ஆகிவிட்டதே என்று சொல்லொணா வேதனைக்குள்ளானார். ஜெமினி ஸ்தாபனத்தில் நீண்ட காலமாகப் பணிபுரிந்து 196

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/214&oldid=824587" இலிருந்து மீள்விக்கப்பட்டது