பக்கம்:சாவி-85.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 கோயங்காவிடம் பேசிவிட்டு மறுபடி சாவியைத் தொடர்பு கொள்வதாகச் சொல்லி அனுப்பினார். அப்புறம் ஒரு வாரம் பேச்சு மூச்சே இல்லை. காரணம்? அப்போது 'தினமணி' அலுவலகத்தில் வேறுவிதமான சூழ்நிலை. சாவி அவர்கள் அதை இப்போது நினைத்துப் பார்க்கிறார்: 'நான் கதிரில் சேருவதற்கு அங்கே கொஞ்சம் எதிர்ப்பு இருந்தது. தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமனும், ஜெனரல் மானேஜர் டி.கே.தியாகராஜனும் ஒரு பக்கம். எஸ்.வி.ஸ்வாமி இன்னொரு பக்கம். ஒரு வாரத்துக்குப் பிறகு நான் கோயங்காவைச் சந்தித்துப் பேச ஏற்பாடாயிற்று. என் நிபந்தனைகளை நான் ஒரு காகிதத்தில் துல்லியமாக டைப் செய்து கொண்டு போனேன். திரு. பி.டி.கோயங்கா அதைப் படித்துப் பார்த்து விட்டு 'ஓ.கே. எப்போது வேலைக்குச் சேருகிறாய்? என்று கேட்டார். ஒரு மாதம் அவகாசம் தேவை என்றேன். ஆனாலும் நான் தினமணி கதிர் ஆசிரியராகப் பொறுப்பேற்பது ஏதோ காரணத்தினால் இழுபறியாகவே இருந்தது. ஒரு மாதம் சென்ற பிறகு மீண்டும் கோயங்காவைப் பார்த்தேன். நான் பொறுப்பேற்பது எப்போது?’ என்று கேட்டேன். இன்று, நாளை என்று தள்ளிக் கொண்டே போனார். இந்தத் தாமதம் மேலும் ஒரு மாத காலம் நீடித்தது. நான் பொறுமை இழந்து விட்டேன். ஒருநாள் நானாகவே கோயங்காவைப் போய்ப் பார்த்தேன். 'நான் ஆசிரியராக வருவதில் உங்களுக்குள் ஏதேனும் பிரச்னை இருந்தால் இப்போதே சொல்லி விடுங்கள். எனக்கு அதில் எந்த வருத்தமும் இருக்காது என்றேன். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பொறுப்பேற்பதற்கு முன் 204

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/222&oldid=824605" இலிருந்து மீள்விக்கப்பட்டது