பக்கம்:சாவி-85.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 எல்லாம் திறந்து வச்சு ரொம்ப காற்றோட்டமாக்கி இருக்கீங்க என்று கல்கி ஆசிரியர் ராஜேந்திரன் சாவியைப் பாராட்டினார். ராஜேந்திரன் அவர்களின் பாராட்டு சாவிக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தது. தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமை செய்து அடியோடு மாற்றி அமைத்த போதிலும் அந்த மாற்றத்தை வாசகர்கள் உணர்ந்திருக்கிறார்களா, வரவேற்கிறார்களா என்று அறிந்து கொள்ளும் ஆவலில் சாவி இருந்த போதுதான் திரு. ராஜேந்திரன் பாராட்டு அவரை உற்சாகப்படுத்தியது. சாவி அவர்களின் லே-அவுட் திறமை பற்றி கல்கி கி. ராஜேந்திரன் சொல்கிறார்: 'இப்போதும் பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் நம் கவனத்தைக் கவருவது சாவி அவர்களின் லே-அவுட்கள். ஒவ்வொரு பக்கத்தையும் நின்று, பார்த்து ரசிக்கும்படி அமைப்பதில் அவர் வல்லவர். இதற்காகப் பல மணி நேரங்கள் செலவிடுவார். வாசகரைக் கவர வேண்டும் என்பதற்காக குத்திக் குதறிக் கிளறியது போல லே-அவுட் செய்து, கொட்டிக் கவிழ்த்தது போல வண்ணங்களை வாரி இறைக்க மாட்டார். சாவியின் லே-அவுட் என்றால் அதில் பளிச்சென்று தெரிகிற மாதிரி ஒரு நளினம் இருக்கும். ஒரு அழகுணர்ச்சி தூக்கலாகத் தென்படும்." பதினேழாயிரம் பிரதிகள் மட்டுமே விற்பனையாகிக் கொண்டிருந்த கதிரை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் உயர்த்தியது சாவி அவர்களின் சாதனை. திறமைமிக்க எழுத்தாளர்களைத் தேடிப் பிடித்து கதிரில் எழுதக் களம் அமைத்துக் கொடுத்தார். எழுத்தாளர்கள் அதுவரை கண்டிராத ஒரு விளம்பர வெளிச்சத்தை அவர்கள் மீது சாவி வீசினார். ஒரு எழுத்தாளரின் 210

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/228&oldid=824617" இலிருந்து மீள்விக்கப்பட்டது