பக்கம்:சாவி-85.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 ஒரு ஆரம்ப கால எழுத்தாளர்தானே என்று அலட்சியப் படுத்தாமல் பெருந்தன்மையுடன் சாவி சார் அப்படிக் கேட்டதோடு அல்லாமல் அந்த வருஷ தீபாவளி மலரைத் தயாரிக்கையில் ஒரு சிறுகதை எழுதித் தரும்படி கடிதம் மூலம் அழைப்பும் விடுத்தார். என்னுடைய தெரியாத்தனமோ, இல்லை ஏதோ ஒரு இக்கட்டோ, இல்லை இரண்டுமேதானோ, அந்த அழைப்பை ஏற்று நான் அந்த வருஷம் கதிருக்குக் கதை எழுதத் தவறி விட்டது நிஜம். கிட்டத்தட்ட ஒரு வருஷம் சென்று புதுமையான அனுபவங்களை - என் வெளிநாட்டுப் பயணக் கதையை - கதிரில் தொடராக எழுதி முடித்த பிறகு ஒருநாள் சாவி சார் என்னிடம் வெளிப்படையாகப் பேசினார். "அழைப்பு அனுப்பியும் நீங்கள் அதை ஏற்று எழுதாதது மிகப்பெரிய தவறு சிவசங்கரி, கதிரில் நீங்கள் தொடர்ந்து எழுதப்போகும் இந்தத் தருணத்தில் ஒன்று சொல்கிறேன் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்; ஒருவர் அனுப்பும் அழைப்பை மதிக்கத் தவறக்கூடாது; எதிர்காலத்தில் உங்களுக்கு வெளிப்பத்திரிகைகளிலிருந்து அழைப்பு வந்தால், தட்டாமல் நீங்கள் அவற்றில் எழுத வேண்டும். எழுத்தாளர் என்பவர் ஒரு பத்திரிகைக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல; நீங்கள் கதிருக்கு எழுதுங்கள், பிறருக்கும் எழுதுங்கள்...' ஆரம்ப காலத்திலிருந்தே சாவி சார் என் எழுத்துக்களுக்குக் கொடுத்த ஊக்கம் அலாதியானதுதான். 'வருகிற தமிழ்ப் புத்தாண்டில் நீங்கள் தொடர்கதை ஒன்று தொடங்குங்கள்; நாலு மாச அவகாசம் இருக்கிறது, யோசித்து கருவைத் தேர்ந்தெடுங்கள்; எழுதுவதை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக எழுதுங்கள் என்று சொல்வாரே தவிர, 'என்ன 212

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/230&oldid=824623" இலிருந்து மீள்விக்கப்பட்டது