பக்கம்:சாவி-85.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் மகிழ்வார்கள் என்பதை நன்கு புரிந்து வைத்திருந்த சாவி அந்தக் கதைகளுக்கு கோபுலு, ஜெயராஜ் போன்ற ஓவியர்களைக் கொண்டு பெரிய பெரிய வண்ணச் சித்திரங்களாக வரையச் சொல்லி அவற்றை முழுப்பக்க அளவில் வெளியிட்டார். அது மட்டுமல்ல; அந்தச் சித்திரங்கள் மூவண்ணச் சித்திரங்களாக வெளியானபோது எழுத்தாளர்கள் அடைந்த மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்? அந்தக் காலத்தில் கதைகளை மூவண்ணச் சித்திரங்களுடன் வெளியிடுவது ஒரு புதுமை. உயர்ந்த எழுத்தாளர் என்று மதிக்கப்பட்ட தி.ஜானகிராமன் அவர்கள் செம்பருத்தி தொடர்கதையை வாரா வாரம் கதிர் அலுவலகத்துக்கே நேரில் வந்து இரவு பத்து மணி வரை அங்கேயே இருந்து எழுதிக் கொடுத்து விட்டுச் செல்வார். சுப்புடு என்ற கலை விமரிசிகரைப் பெரிய அளவில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது சாவி அவர்கள்தான். டெல்லியிலிருந்து அவரைப் பிரத்யேகமாக வரவழைத்து, எக்ஸ் பிரஸ் காம்பவுண்டுக்குள்ளேயே இருந்த கெஸ்ட் ஹவுஸில் தங்க வைத்தார். சுப்புடுவுக்கும் செம்மங்குடி அவர்களுக்கும் விமரிசனத்தைப் பொறுத்தவரை எப்போதும் ஏழாம் பொருத்தம் என்பது இசை ரசிகர்கள் அறிந்த ரகசியம். சிற்சில நேரங்களில் செம்மங்குடியைக் கடுமையாக விமரிசித்துப் பரபரப்பை ஏற்படுத்தியவர் சுப்புடு. இதனால் நீண்டகாலம் இருவருக்குமிடையே எப்போதும் ஒரு மெளனப் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தும் விதத்தில், சென்னை ஆர்.ஆர். சபாவில் சுப்புடுவுக்கு ஒரு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்தார் சாவி, முதலில் செம்மங்குடி அவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இஷ்டப்படவில்லை என்றாலும் சாவி அவர் வீட்டுக்குச் சென்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒப்புக் கொண்டார். இந்த நிகழ்ச்சியைக் காணப் பெரும் கூட்டம் கூடி சபா 219

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/237&oldid=824636" இலிருந்து மீள்விக்கப்பட்டது