பக்கம்:சாவி-85.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 ஹாலின் உள்ளும் புறமும் நிரம்பி வழிந்தது. அன்று சுப்புடு செம்மங்குடி இருவருமே மனம் விட்டுப் பேசினார்கள். சுப்புடுவுக்குச் சிறப்புச் செய்ததோடு நிற்கவில்லை சாவி, சோ அவர்களை ஒரு நடிகராகவும், நாடக ஆசிரியராகவும் மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது அவரிடம் இருந்த எழுத்துப் பொறியை சாவி இனம் கண்டு அவரை கதிரில் தொடர்ந்து எழுத வைத்தார். தினமணி கதிரில் 'மை டியர் பிரம்மதேவா என்ற தலைப்பில் சோ தொடர்ந்து எழுதிய கட்டுரைகளை வாசகர்கள் மிக ஆர்வத்தோடு வாங்கிப் படித்தார்கள். இப்போது கூட சோ அவர்கள் பல கூட்டங்களில் சாவியை வைத்துக் கொண்டே இன்று என் விமர்சனங்கள், கட்டுரைகள் பற்றி யாருக்காவது கோபம் இருந்து திட்ட வேண்டும் போல் ஆத்திரம் வந்தால் தயவு செய்து நீங்கள் உங்கள் கோபத்தைக் காட்ட வேண்டிய இடம் இதோ இங்கேதான் என்று சாவியைச் சுட்டிக் காட்டுவதுண்டு. பெருந்தலைவர் காமராஜருக்கும் சாவி அவர்களுக்கும் இருந்த நட்பு பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். தன் வீட்டுக்கு ஒரு முறை விருந்துண்ண வரும்படி ரொம்ப நாட்களாகவே சாவி காமராஜ் அவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் காமராஜ் 'ஆகட்டும் பார்க்கலாம்" என்றே பதில் சொல்லிக் கொண்டிருந்தார். சாவியும் விடாமல் கூப்பிட்டுக் கொண்டே இருந்தார். சும்மா சும்மா கூப்பிட்டுக்கிட்டே இருக்காதீங்க. நேரம் கிடைக்கும்போது நானே வந்துடறேன்' என்று காமராஜ் சொல்லியிருந்தார். அதன்படி ஒரு நாள் திடீரென்று தாம் வருவதாக சாவிக்குச் செய்தி அனுப்பி விட்டார். சாவிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பலமான விருந்துக்கு ஏற்பாடு செய்தார். காமராஜருக்குப் பிடித்த அத்தனை அயிட்டங்களையும் தயாரித்துப் 220

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/238&oldid=824638" இலிருந்து மீள்விக்கப்பட்டது