பக்கம்:சாவி-85.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. எழுத்தாளர் துமிலன் 1951-52ல் தினமணி கதிர் இரண்டனா பத்திரிகையாக முதன்முதல் தொடங்கப்பட்டபோது எழுத்தாளர் துமிலன் (என்.ராமசாமி) அதன் ஆசிரியராக அமர்ந்தார். துமிலனின் எழுத்தில் மெலிதான நகைச்சுவை இழையோட்டம் இருக்கும். சாவிக்கு அவரது எழுத்துக்கள் ரொம்பப் பிடிக்கும். 'ஆனந்த விகடனில் அப்பளக் கச்சேரி என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகளில் மெலிதான நகைச்சுவை இழையோடும்' என்கிறார் சாவி, - துமிலன் ஏற்கனவே ஆனந்த விகடனில் நல்ல அனுபவம் பெற்றவர் என்பதால் அவரை கதிருக்குப் பொறுப்பாசிரியராக நியமித்தார்கள். - தினமணி கதிர் நின்று போனபிறகு துமிலன் வேலையில் லாமல் இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் தினமணி கதிர் மீண்டும் தொடங்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பின் சாவி அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். துமிலன் அவர்களின் திறமையையும் - குறிப்பாக நகைச்சுவையையும் - நன்குணர்ந்திருந்த காரணத்தாலும் அவர் வேலை இல்லாமல் சிரமப்படுகிறார் என்பதாலும் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சாவி விரும்பினார். அச்சமயம் ஒரு நாள் காமராஜர் அவர்களுடன் சாவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/246&oldid=824659" இலிருந்து மீள்விக்கப்பட்டது