பக்கம்:சாவி-85.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் மைசூருக்குப் பயணமானார். தம்மோடு துமிலனையும் அழைத்துச் சென்றார். சமயம் பார்த்து காமராஜரிடம் துமிலனைப் பற்றிச் சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தால் ஏதேனும் வழி கிடைக்க வாய்ப்புண்டு என்று சாவி திட்டமிட்டார். தகுந்த சமயம் வாய்த்தபோது துமிலனை காமராஜருக்கு அறிமுகப்படுத்தி, இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். விகடனில் அனுபவம் பெற்றவர். இவருக்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். 'காங்கிரஸ் மாநாடுகள் சிலவற்றில் இவரைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. இவர் எழுத்தையும் விகடனில் படித்திருக்கிறேன். சின்னச் சின்ன வாக்கியங்களாக எழுதுவார் என்று காமராஜர் துமிலனைப் பற்றிச் சொன்னார். காங்கிரஸுக்கென்று ஒரு பத்திரிகையைத் தொடங்கி அதற்கு இவரை ஆசிரியராகப் போடலாமே என்று சாவி யோசனை சொன்னபோது 'ஓ... செய்யலாமே! யோசிப்போம்" என்றார் காமராஜர். அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே துமிலன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சுதந்திரச் சங்கு என்று ஏற்கெனவே பிரபலமாக இருந்த பத்திரிகையின் பெயரில் மீண்டும் தொடங்குவதென்று முடிவாயிற்று. புதுப்புது அம்சங்களுடன் அப்பத்திரிகை சிறப்பாகவே இருந்தது. ஆயினும் சில இதழ்கள் வெளியாவதற்குள்ளாகவே ஏக நஷ்டம் ஏற்பட்டதால் தொடர்ந்து நடத்த முடியாமல் நின்று போனது. துமிலனுக்கு மீண்டும் வேலை இல்லாமல் போயிற்று. ஒருநாள் தினமணி கதிர் அலுவலகத்திற்கு வந்த துமிலன் சாவியைப் பார்த்து தான் எழுதிக் கொண்டு வந்த கட்டுரைகளைக் கொடுத்தார். துமிலனைப் பார்க்க சாவி அவர்களுக்குச் சங்கடமாக 229

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/247&oldid=824661" இலிருந்து மீள்விக்கப்பட்டது