பக்கம்:சாவி-85.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 மீறவும் முடியவில்லை. பெரியவரின் ஆணையைத் தட்டவும் முடியவில்லை. மறுபடியும் "நான் எழுதுவதற்கில்லை. பெரியவா என்னை மன்னிக்கணும்' என்று சாவி தீர்மானமாகச் சொல்லி விட்டார். சுவாமிகள் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. விபூதி குங்குமம் பிரசாதம் கொடுத்து மூவரையும் ஆசீர்வதித்து வழி அனுப்பினார். காரில் திரும்பும்போது சாவி அவர்களை மற்ற இருவரும் ரொம்பவும் கோபித்துக் கொண்டார்கள். "அதெப்படி பெரியவா ஆணையை மீறி முடியாதுன்னு. சொல்லலாம்?" என்று கடிந்து கொண்டார்கள். "அவர்தான் ஆசீர்வாதம் பண்றேன்னு சொன்னார் இல்லையா? அதுக்கு மேல என்ன வேணும்?" இப்படி சாவியைப் பேசவிடாமல் டி.கே.டியும், எம்.கேயும் பொரிந்துத் தள்ளினார்கள். சாவி அமைதியாக இருந்தார். உள்ளுக்குள் ஒரு சஞ்சலம். 'ஒரு வேளை முடியாது' என்று சொன்னது தப்புதானோ? அவர் அவ்வளவு சொல்லியும் அவர் கட்டளையை மீறியது சரியா?" என்று சாவி தனக்குத்தானே கேள்விகள் கேட்டுக் கொண்டார். பெரியவாளுடன் தர்க்கம் செய்ததைப் பெரிய குற்றமாகக் கருதினார். அந்தக் குற்ற உணர்வு அவர் மனதில் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது. ஆனாலும் தனக்குச் சரியென்று பட்டதைத்தானே சொன்னோம். அதில் என்ன தவறு என்றும் தோன்றியது. மூவரும் காரில் புறப்பட்டுச் சிறிது தூரம் போனபோது 'ரியர் வியூ மிர்ரர் வழியே எதேச்சையாக டி.கே.டி. பார்த்தார். 234

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/252&oldid=824673" இலிருந்து மீள்விக்கப்பட்டது