பக்கம்:சாவி-85.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் கல்கி அவர்களின் வாரிசு சாவி என்றால் ‘மாலி: அவர்களின் வாரிசாக கோபுலுவைச் சொல்ல வேண்டும். இங்கே போயிருக்கிறீர்களா? என்ற பகுதியை சாவி விகடனில் எழுதியபோது அதற்காக இவ்விருவரும் கோவா, பம்பாய், பெங்களுர், டெல்லி, அஜந்தா, எல்லோரா, மாமல்லபுரம், பொள்ளாச்சி, சென்ட்ரல் ஸ்டேஷன் என்று பல இடங்களுக்குச் சேர்ந்தே போயிருக்கிறார்கள் இப்படி ஒரு அருமையான காம்பினேஷனில் அந்தக் கட்டுரைகள் வெளியாயின. கோபுலுவின் படம் வரையும் திறமை மட்டும் அல்லாமல் அவரது சில தனிப்பட்ட பழக்க வழக்கங்களும் சாவியைக் கவர்ந்தன. 'கோபுலு படம் வரையும்போது பிரஷ்ஷை உதறி சுற்றுப்புறத்தைப் பாழடிக்க மாட்டார். கீழே ஒரு சிறு குப்பைகூட இருக்காது. பக்கத்துச் சுவர்களில் பிரஷ்ஷால் உதறப்பட்ட வண்ண அழுக்குகள் இருக்காது. அவர் வந்து உட்காரும்போது அந்த இடம் எப்படி தூய்மையாக இருக்குமோ அவர் வேலை முடித்து எழுந்து போகும்போதும் அப்படியேதான் இருக்கும்’ என்கிறார் சாவி. சாவியைப் பற்றி கோபுலு என்ன சொல்கிறார் தெரியுமா? "சிருங்கேரி போய் துங்கா ஆற்றைப் பார்த்தால் அதில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் மீன்களைப் பார்க்கையில் எனக்கு சாவியின் நினைவுதான் வரும். ஆற்றின் கரையோரம் வளர்ந்திருக்கும் நாணல்களைப் பார்த்தாலும் சாவியின் நினைவுதான் வரும். எத்தனையெத்தனை சோதனைகள் வந்தாலும், அவற்றை எளிதாக எதிர் கொண்டு வளைந்து கொடுக்க வேண்டிய நேரங்களில் நாணல் போல் வளைந்து கொடுத்து வெற்றி பெறும் சாகசங்களை நான் கண்டிருக்கிறேன். 237

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/255&oldid=824679" இலிருந்து மீள்விக்கப்பட்டது