பக்கம்:சாவி-85.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் பாடுவதை நாம் வீட்டிலிருந்தபடியே கேட்கிறோம். எந்த இடத்துக்குப் போனாலும் கேட்கிறோம். மலை மீது உயரத்தில் இருந்தாலும் கேட்கிறோம். அதைத்தான் பெரிய அதிசயமாகக் கருதுகிறேன்' என்றார் கலைஞர். "அதே கேள்வியை நான் இன்று இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் அவரைக் கேட்டிருந்தால் கம்ப்யூட்டர் என்று சொல்லியிருப்பாரோ என்னவோ?’ என்கிறார் சாவி. தன்னால் மறக்க முடியாத பயணம் நாகர்கோவில் தி.மு.க. மாநாடு முடிந்ததும் திருவனந்தபுரம் கோவளம் கடற்கரைக்குப் போய் இரண்டு நாட்கள் கலைஞருடன் தங்கிவிட்டு வந்ததுதான் என்கிறார் சாவி. "அந்த மாநாட்டுக்கு நான் போயிருந்தேன். அப்போது நான் தினமணி கதிர் ஆசிரியர். எனக்குத் தனி அறை ஒதுக்கி வசதியாகத் தங்கவைத்து மிக அக்கறையோடு கவனித்துக் கொண்டார்கள். மாநாடு முடிந்தபின் கலைஞர், அவரது துணைவியார் திருமதி ராஜாத்தி அம்மாள், அமைச்சர் மாதவன், அவரது மனைவி எல்லோரும் திருவனந்தபுரம் அருகிலுள்ள கோவளம் போவதாக திட்டம். நான் சென்னைக்குத் திரும்ப டிக்கெட் வாங்கி இருந்தேன். - 'நீங்கள் சென்னைக்குப் போக வேண்டாம். கலைஞருடன் திருவனந்தபுரம் போகிறீர்கள் என்று கலைஞரின் உதவியாளர் ஒருவர் வந்து சொல்லிவிட்டுப் போனார். கலைஞருடன் பயணம் செய்யும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது. கோவளத்தில் தனித்தனி குடில்களில் தங்குவதற்குப் பக்காவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தினமும் காலையிலும் மாலையிலும் கடற்கரை மணலில் அமர்ந்து கலை, அரசியல், இலக்கியம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். 245

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/263&oldid=824697" இலிருந்து மீள்விக்கப்பட்டது