பக்கம்:சாவி-85.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 சந்திர போஸ் காய்ச்சலுடன் மாநாட்டில் கலந்து கொண்டதைக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் நேதாஜிக்கு அன்று என்னைப்போல் வயிற்றுப்போக்கு இல்லை என்பதை சாவி கருத்தில் கொள்ள வேண்டும் என்று சொன்னதும் விழாவுக்கு வந்திருந்தவர்கள் அத்தனை பேரும் எழுப்பிய சிரிப்பொலி அடங்க வெகு நேரமாயிற்று. சாவி அவர்களின் மாப்பிள்ளை ராமதாஸ் மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது நடுவில் பம்பாயில் நேர்ந்த விமான விபத்தில் உயிரிழந்த செய்தி பேரிடியாக சாவி குடும்பத்தினரைத் தாக்கியது. அப்போது சாவி அமெரிக்காவில் இருந்தார். இந்தச் செய்தியைக் கேட்டதும் கலைஞர் அவர்கள் திருமதி சாவிக்கு ஆறுதல் சொல்லி துக்கம் விசாரித்ததோடு மட்டுமல்லாமல் முரசொலியில் ஒரு பக்கம் நெஞ்சுருகி எழுதியிருந்த கடிதம் ஒரு இலக்கியமாகவே அமைந்திருந்தது. - - 'அந்த உணர்ச்சிபூர்வமான கட்டுரை என் சோகத்தில் பாதியைக் குறைத்து விட்டது' என்கிறார் சாவி. சாவிக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்து வீட்டுக்கு வந்து ஒய்வில் இருந்தபோதும் தமக்கு நடந்த ஆபரேஷன் சமாசாரத்தை கலைஞருக்குத் தெரியப்படுத்தவில்லை. அந்த ஆபரேஷன் குறித்து குமுதத்தில் சாவி எழுதிய கட்டுரையைப் படித்த பிறகுதான் கலைஞருக்கு விஷயம் தெரியவந்தது. அன்றே சாவி அவர்களின் வீட்டுக்கு ஆற்காடு வீராசாமி மற்றும் தி.மு.க. நண்பர்களுடன் வந்து உடல்நலம் விசாரித்தார். 'ஏன் எனக்கு முன்பே தகவல் சொல்லவில்லை’ என்று உரிமையோடு கோபித்துக் கொண்டார். 'கலைஞர் என்னை வந்து பார்த்தது எனக்கு மிகுந்த ஆறுதலாயிருந்தது. நான் அவருக்கு சிரமம் தர விருப்பப் ^48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/266&oldid=824703" இலிருந்து மீள்விக்கப்பட்டது