பக்கம்:சாவி-85.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. இடுக்கண் களைந்த கலைஞர் கலைஞரின் ஆட்சியைக் கடுமையாக விமரிசித்து தினமணி நாளேட்டில் அவ்வப்போது தலையங்கக் கட்டுரைகள் வெளியாவது உண்டு. இது கலைஞருக்குச் சற்று எரிச்சலை ஏற்படுத்தி இருந்தது. அதை ஒரு வகையான கோபம் என்று கூடச் சொல்லலாம். அப்போதெல்லாம் சாவி அவர்கள்தான் கலைஞர் அவர்கள் திருப்தி அடையும் வகையில் சமாதானம் பேசி விட்டு வருவது வழக்கம். கலைஞர் அவர்களின் ஆட்சி மாறி எம்.ஜி.ஆர். தலைமையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபோது எம்.ஜி.ஆர். படத்தை தினமணி கதிர் அட்டையில் போட வேண்டும் என்று நிர்வாகம் சாவியிடம் கேட்டுக் கொண்டது. ஸ்பெஷல் ஆபீசர் ராமகிருஷ்ணன் எம்.ஜி.ஆர். படத்தைக் கதிர் அட்டையில் வெளியிட வேண்டும் என்பதில் ரொம்பக் குறியாக இருந்தார். சாவியிடம் நைச்சியமாகப் பேசி காரியத்தைச் சாதிக்கப் பல உபாயங்களைக் கையாண்டார். அட்டையில் யார் படத்தைப் போடுவது என்பது அப்பத்திரிகையின் ஆசிரியருக்குள்ள உரிமை. அதில் யாரும் தலையிடுவதை நான் விரும்பவில்லை. தினமணி கதிர் அட்டையில் எம்.ஜி.ஆரின் படத்தை நான் வெளியிட மாட்டேன். என்னையும் மீறி அப்படி ஒருவேளை அவர் படம் கதிரில் வெளியாகுமானால் அதற்கடுத்த வாரம் நான் கதிர் ஆசிரியராக இருக்கமாட்டேன்" என்று ராமகிருஷ்ணனிடம் கண்டிப்பும் கறாருமாகச் சொல்லி விட்டார் சாவி. 256

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/274&oldid=824721" இலிருந்து மீள்விக்கப்பட்டது