பக்கம்:சாவி-85.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 தான் ஊரில் இல்லாத சமயத்தில் தமக்குக் குழி பறித்துக் கொண்டிருக்கும் கைங்கர்யம் நடந்து கொண்டிருப்பது அமெரிக்கா வில் இருந்தபோது சாவிக்குத் தெரியவில்லை. இதற்குள் இங்கே சென்னையில் சாவி தினமணி கதிரிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார் என்ற செய்தி வேகமாகப் பரவி கலைஞர் அவர்களின் காதுக்கும் எட்டியிருக்கிறது. செய்தியைக் கேள்வியுற்ற கலைஞர் அவர்கள் திருமதி சாவி அவர்களுக்குப் போன் செய்து அவர் வந்தால் கவலைப் படாமல் இருக்கச் சொல்லுங்கள். நான் வேறொரு ஏற்பாடு செய்திருக்கிறேன். சாவி சென்னை வந்ததும் நானே அவரோடு பேசுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். சாவி டெல்லி வழியாகத் திரும்பியதால், டெல்லி வந்து இறங்கியதும் அவரது நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான திரு. பி.எஸ்.ரங்கநாதன் (கடுகு) அவர்கள் சாவியிடம் விஷயத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தி விட்டார். சாவிக்கு இது சற்று அதிர்ச்சி தந்த போதிலும் ஒரேயடியாய்க் கலங்கிப் போய் விடவில்லை. இம்மாதிரியான சோதனைகளும் வேதனைகளும் சாவிக்குப் புதிதல்லவே! .. சென்னை விமான நிலையத்திலிருந்து காரில் கிளம்பி அண்ணாநகர் வந்து வீட்டுக்குள் காலடி வைத்த அதே தருணத்தில் டெலிபோன் ஒலிக்கவே சாவியே ரிலீவரை எடுத்துப் பேசினார். மறுமுனையில் கலைஞர்: 'கதிர் சமாசாரம் அம்மா சொன்னாங்களா? கவலைப் படாதீங்க. குங்குமம்' என்ற பெயரில் புதிய பத்திரிகை ஒன்று தொடங்க முடிவு செய்திருக்கிறோம். அதுபற்றி நாளை காலை மாறன் உங்கள் வீட்டுக்கு வந்து பேசுவார்' என்றார். அந்த வினாடியில் சாவி அவர்கள் மகிழ்ந்து போனார் 258

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/276&oldid=824725" இலிருந்து மீள்விக்கப்பட்டது