பக்கம்:சாவி-85.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. குங்கும நாட்கள் கலைஞர் அவர்கள் வாக்களித்த படியே சாவியை ஆசிரியராகக் கொண்டு குங்குமம் வார இதழ் விரைவிலேயே தொடங்கப்பட்டது. அதைக் கட்சி சார்புப் பத்திரிகையாக இல்லாமல் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் குங்குமம் இதழின் ஆசிரியர் பொறுப்பு சாவி அவர்களுக்குத் தரப்பட்டது. தி.மு.க. சார்பாக ஒரு தலைப்பட்சமான செய்திகள், கட்டுரைகள் ஏதும் குங்குமத்தில் வரக்கூடாது என்பதில் சாவி கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டார். அதேபோன்று தம்முடைய தெய்வ பக்தி, நம்பிக்கை போன்றவற்றைக் குங்குமத்தில் நுழைய விடக் கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருந்தார். பத்திரிகையின் பெயர் குங்குமம்' என்றிருந்ததால் முதல் இதழின் அட்டையில் ஒரு பெண்ணின் நெற்றியில் அவளுடைய தாய் குங்குமப் பொட்டு இடுவது போல (தாயின் வலது கரம் மட்டும் தெரியும்) புகைப்படம் எடுத்து அதையே அட்டைப் படமாக வெளியிட்டார். புகைப்படம் எடுக்கப்பட்டபோது அந்த வீட்டுச் சுவரில் மாட்டப்பட்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியார் படமும் சின்னதாக அந்தப் புகைப்படத்தில் இடம் பெற்று விட்டது. இது மிகவும் எதேச்சையாக நேர்ந்ததே தவிர குங்குமம் முதல் இதழில் காஞ்சிப் பெரியவரின் படம் வர வேண்டும் என்று சாவி திட்டமிடவும் இல்லை. அந்த எண்ணத்தில் அந்தப் புகைப்படம் எடுக்கப்படவும் இல்லை. - 260

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/278&oldid=824729" இலிருந்து மீள்விக்கப்பட்டது