பக்கம்:சாவி-85.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் "ஒ சான்ஸ் கொடுத்துப் பாருங்க. செய்கிறோமா இல்லையா பாருங்க' என்றனர் இருவரும். ஒரு மாதத்துக்குப் பின் வரப்போகும் ஒரு குறிப்பிட்ட இதழை அவர்கள் தயாரிப்பதென்று முடிவாயிற்று. ஒப்பந்தப்படி அவர்களும் குறிப்பிட்ட இதழைத் தயாரித்து முடித்தனர். 'சரி; ஒரு மாசம் டைம் கொடுத்தேன். ஒரு இஷ்யூ பண்ணியிருக்கீங்க. அடுத்தடுத்து வாரா வாரம் பத்திரிகை வந்தாகணும். சிறப்பாகவும் புதுப்புது அம்சங்களோடும் வரவேண்டும். முடியுமா? எவ்வளவு சிரமம் என்று இப்போது புரிகிறதா?” என்று கேட்டார். தமிழ்ப் பத்திரிகை உலகில் ஆசிரியராக உள்ள ஒருவர், வெளியிலிருந்து இரண்டு பேரை அழைத்து ஒரு வாரம் நீங்கள் பத்திரிகையின் ஆசிரியராக இருங்கள் என்று வாய்ப்பு கொடுத்து உற்சாகப்படுத்திய முதல் ஆசிரியர் சாவி அவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 'அப்புறம்தான் குமுதம் இந்தப் பாணியைப் பின்பற்றிப் பல பிரமுகர்களை அழைத்து, குமுதம் இதழ் தயாரிக்கும் வாய்ப்பை வழங்கியது என்பதை நானே சொல்லிக் கொள்ளக் கூடாது' என்கிறார் சாவி. இந்தக் காலகட்டத்தில்தான் மாதப் பத்திரிகையுடன் வார இதழ் ஒன்றும் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கினார் டில்லி பாலு, சாவியும் அதுபற்றித் தீவிரமாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார். மோனா மாத இதழ் தொடங்கி லாபகரமாகப் போய்க் கொண்டிருந்ததால் பாலுவின் யோசனையை அசை போட்டுப் பார்த்தார் சாவி. “எத்தனை நாளைக்குத்தான் இப்படியே மற்றவர்களுக்காக 265

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/283&oldid=824739" இலிருந்து மீள்விக்கப்பட்டது