பக்கம்:சாவி-85.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. சொந்தப் பத்திரிகைகள் டெல்லி நண்பர் திரு. பாலுவின் இடைவிடாத தூண்டுதலாலும், ஊக்கத்தாலும் ஒய்வு பெற வேண்டிய வயதில் சொந்தமாகப் பத்திரிகை தொடங்கினார் சாவி. உழைத்தது போதும்... ரிடையர் ஆகி விடலாமா? என்று யோசிக்கும் வயதில் ஒரு இளைஞனுக்குரிய ஆர்வத்தோடும் சுறுசுறுப்போடும் இருபதாண்டு காலம் அதை வெற்றிகரமாக நடத்தினார். பெரிய அளவில் இல்லாமல் குறைந்த பக்கங்களோடுதான் மே மாதம் ஆறாம் தேதி 1979 அன்று சாவி முதல் இதழ் தோன்றியது. விலை வெறும் எழுபத்தைந்து பைசா மட்டுமே. முதல் இதழ் மூன்று லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தபோதிலும் அடுத்தடுத்து வெளியான இதழ்களின் விற்பனை படிப்படியாகக் குறைந்து கொண்டே போயிற்று. அதிக பக்கங்கள் கொண்ட ஒரு கனமான பத்திரிகை யையே வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட சாவி அடுத்த வாரமே பக்கங்களை அதிகரித்து, விலை யையும் ஏற்றி வாசகர்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வகையில் மாற்றி அமைத்தார். இதனால் சாவி இதழ் விற்பனை வாரா வாரம் ஏறிக் கொண்டே போனதால் விற்பனை முகவர்கள் அனுப்பி வைத்த டெபாசிட் தொகை ஏழரை லட்சம் ரூபாயைத் தாண்டியது. பண பலம், பார்ட்னர் பலம் இரண்டும் சேரவே சொந்தமாக 267

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/285&oldid=824745" இலிருந்து மீள்விக்கப்பட்டது