பக்கம்:சாவி-85.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 என்றுமே சொல்லிக் கொண்டதில்லை. ஆனால் அவரால் வளர்ந்தவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அதுதான் சாவியின் சிறப்பு என்று கூறும் தொழிலதிபர் டாக்டர் நல்லி குப்புசாமி அவர்கள் "இன்றளவும் ஒரு எழுத்தாளரின் புத்தகங்களை ஒட்டு மொத்தமாக வாங்கி யாருக்காவது பரிசளிக்கலாம் என்று நினைத்தால், குடும்பத்தார் அனைவராலும் படித்துப் பாதுகாக்கப்படும் புத்தகங்களாக அவை இருக்க வேண்டும் என்று நினைத்தால், நான் முதலில் நாடுவது சாவியின் புத்தகங்களையே" என்கிறார். பலருக்கு உதாரணமாக இருக்க வேண்டுமென்றால் முதலில் அப்படி இருப்பதற்கான தகுதியை ஒருவர் பெறவேண்டும். காலம் கட்டளையிடும் மாற்றங்களுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சாவி அப்படித் தம்மை முழுமையாகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டவர். மூத்த பத்திரிகை ஆசிரியரும், கல்கி அவர்களோடு நெருங்கிப் பழகியவருமான பகீரதன் அவர்கள் சாவியின் எழுத்துத் திறமை பற்றிக் குறிப்பிடுகையில், 'அறுபது வருடங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டுப் பத்திரிகை உலகில் கரடுமுரடான தமிழே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. அப்படி கரடுமுரடாக இருந்த தமிழ், தேனினும் இனிய மணிப்பிரவாளமாகப் பொங்கிப் பிரவகித்தது. உள்ளுக்குள் பொருமிக் கொண்டிருந்த தமிழ் மொழி மனம் விட்டு கலீர் கலீர் என்று வாய் விட்டுச் சிரித்தது. இந்த ரசவாத வித்தையை நிகழ்த்திய பிதாமகர்களில்" இன்று எஞ்சியிருப்பவர் நண்பர் சாவி ஒருவர்தான். தமிழ் நடையின் சிற்பிகளில் மிக முக்கியமானவர் சாவி என்று சொல்கிறார். நீண்ட காலமாக டெல்லியிலேயே இருந்து வரும் திரு. பி.எஸ்.ரங்கநாதன் (கடுகு) எழுதுகிறார்: "எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் சாவிக்கு நிகர் 280

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/298&oldid=824762" இலிருந்து மீள்விக்கப்பட்டது