பக்கம்:சாவி-85.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 படித்துப் பார்த்துவிட்டு, புதிதாக இருக்கிறது. விறுவிறுப்பாக இருக்கிறது. நீயே மணியன் செல்வனிடம் கொண்டு போய் அருகே உட்கார்ந்து படம் போட்டு எழுதி வாங்கி வா. படம் சரியாகப் போட்டால் தொடர்கதை பிரகாசமாக இருக்கும். உன்னுடைய மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்கதையில் கவனம் செலுத்து' என்று சொன்னார். நான் சாவியில் முதன்முதலாக எழுதிய தொடருக்குப் பெயர் மெர்க்குரிப் பூக்கள். அந்தக் கதை கொடுத்த வெற்றி என்னை ஒரு எழுத்தாளனாக நிலை நிறுத்தியது. வெறுமே துணுக்குச் செய்திகளையும், சினிமா பற்றிய கட்டுரைகளையும், நடிக நடிகையரோடு பேட்டிகளையும் எழுதிக் கொண்டிருந்த பாலகுமாரனை, நிருபராகவே பத்திரிகையில் நிலைத்து விடுவோமோ என்று நினைத்துக் கொண்டிருந்த பாலகுமாரனை பளிச்சென்று திசை திருப்பி சாவி எழுத்தாளனாக்கினார் என்கிறார் பாலகுமாரன். பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அனுபவம் சற்று வித்தியாசமானது. "சாவி அவர்களை முதன் முதலாகச் சந்தித்தபோதே ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொண்டேன். அரை மணி நேரம் என்னிடம் இயல்பான நகைச்சுவையோடு பேசிக் கொண்டிருந்த பின் கேட்டார்: "சாவிக்கு ஏதாவது கதைகள் கொண்டு வந்திருக்கிறீர்களா?” 'கொண்டு வந்திருக்கேன் ஸார்." நான் கொடுத்த கதைகளை ஆர்வமாய் வாங்கிப் படித்த அவரின் முகத்தில் கோபம் தெரிந்தது. நான் திடுக்கிட்டேன். இந்தக் கதைகள் வேற ஒரு பத்திரிகைக்கு அனுப்பப்பட்டு அவங்க நிராகரிச்சதுதானே?" 284

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/302&oldid=824768" இலிருந்து மீள்விக்கப்பட்டது