பக்கம்:சாவி-85.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. பயணங்கள் - நண்பர்கள் பத்திரிகைப் பணிக்கு அடுத்து சாவிக்கு மிகவும் பிடித்தது பயணம்தான். சென்னையை விட்டு வெளியே போவது என்றாலே அவருக்குக் குஷி பிறந்து விடும். இந்தியாவில் அவர் போகாத இடமே இல்லை. குறிப்பாக தென்னிந்தியாவில் அவருக்குப் பிடித்த இடங்கள் பெங்களுர், கோவை, ஊட்டி தனியாகப் பயணம் செய்வதை சாவி எப்போதுமே விரும்புவதில்லை. ஒத்த கருத்துடையவர்கள் யாராவது உடன் இருக்க வேண்டும். பயணத்தின் முக்கியத்துவத்தை நன்கறிந்தவர் அவர். பத்து புத்தகங்கள் படிப்பதும் ஒரு பயணம் போவதும் சமம் என்பார். சாவியின் இந்த ஆர்வம் பற்றி அவரது மகள் திருமதி உமா பிரசாத் எழுதுகிறார்: "நான் பள்ளிக்கூட மாணவியாக இருந்தபோது அப்பாவுக்கு ஒருமுறை பத்திரிகை விஷயமாக உதவி ஆசிரியர்களுடன் ஊட்டி புறப்பட்டுக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்து நீயும் வா என்று அழைத்தார். பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். படிக்க வேண்டியிருக்கு அப்பா... நான் வரவில்லை என்றேன். பாடப் புத்தகத்தை அப்புறம் படிச்சுக்கலாம். முதல்ல வந்து ஊரைப் படி’ என்று அழைத்துக் கொண்டு போனார். அந்த ஊட்டிப் பயணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்து விட்டது. 301

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/319&oldid=824788" இலிருந்து மீள்விக்கப்பட்டது