பக்கம்:சாவி-85.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 கலைஞர் என்பதற்காகவே அந்த அக்ரகாரத்தில் வீட்டுக்கு ஒரு நாள் என்று முறை போட்டுக்கொண்டு குண்டு ஐயருக்கு வாரச் சாப்பாடு போட்டார்கள். விசுவநாதன் வீட்டிலும் ஒருநாள் முறை: உண்டு. காலையில், அவரே வீட்டில் ஏதேனும் டிபன் செய்து கொள்வார். அவ்வப்போது விகடக் கச்சேரிகள் நடத்துவார். அதன் மூலம் கொஞ்சம் பணம் கிடைக்கும். குண்டு ஐயர் காலை வேளைகளில் சேமியா உப்புமா செய்யும்போது ஊரே மணக்கும். விசுவநாதன் மாட்டை மேயவிட மந்தை வெளிக்குக் கொண்டு போகும்போது 'டேய் பையா, திரும்பிப் போறச்சே வந்து போ' என்று குரல் கொடுப்பார். அவர் அப்படிக் குரல் கொடுத்தால் 'வந்து வாணலியில் நான் மீதி வைத்திருக்கிற உப்புமாவைச் சாப்பிட்டு விட்டுப் போ...' என்று அர்த்தம்! குண்டு ஐயர் திடீரென்று ஒருநாள் இறந்து போய் விட்டார். அவர் மரணத்தின் பாதிப்பு நீண்டகாலம் அவனுள் இருந்தது. பள்ளிப்படிப்பு மேல் அவனுக்குப் பிடிப்பே இல்லாமல் போனாலும் சுதேசமித்திரனை விடாமல் படித்து வந்ததால் 'விஷயம் அறிந்த பையன் என்று விசுவநாதனுக்கு ஒரு பெயர். அந்த ஊர் பெரிசுகளுக்கு அப்போது ஒரு சந்தேகம் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது. 'பஸ்ஸுக்கும் காருக்கும் என்ன வித்தியாசம்? திண்ணைப் பேச்சின்போது அந்த சந்தேகம் எழுந்தது. யாருக்கும் சரியான விடை சொல்லத் தெரியவில்லை. விசுவநாதனைக் கூப்பிட்டுக் கேட்போம். - அவனுக்கு அழைப்பு வந்தது. போனான். "நீதான் பேப்பர் படிக்கிறவன். உனக்குத் தெரிந்திருக்கணுமே! சொல்லு, பஸ்ஸுக்கும் காருக்கும் என்ன வித்தியாசம்?" 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/32&oldid=824789" இலிருந்து மீள்விக்கப்பட்டது