பக்கம்:சாவி-85.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. நடத்திய விழாக்கள் ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நாதஸ்வரக் கலைஞர்கள் மாநாட்டில் வாசித்த நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் திறமையை வெகுவாகப் பாராட்டி கல்கி இதழில் சாவி ஒரு கட்டுரை எழுதினார். பின்னர் தமது வாஷிங்டனில் திருமணம் தொடரிலும் நாமகிரிப்பேட்டை அங்கே போய் வாசிப்பதுபோலக் கற்பனை செய்து எழுதியிருந்தார். சாவி கற்பனையாக எழுதியது நாமகிரிப்பேட்டை வாழ்க்கையில் நிஜமாகவே நடந்தது! கிருஷ்ணன் அவர்களை ஒரு இசைத் தூதராக இந்திய அரசு பர்மா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஃபிஜி போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. சுமார் மூன்று மாத காலம் தன் வாசிப்பால் அந்நாட்டு மக்களை மகிழ்வித்து விட்டு திரும்பிய நாமகிரிப்பேட்டை அவர்களுக்கு சென்னையில் டாக்டர் கலைஞர் தலைமையில் ஒரு பெரும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தார் சாவி. அவ்விழாவில் அப்போதைய அமைச்சர் கராசாராம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ஆகியோர் முன்னிலையில் தங்க நாதஸ்வரம் பரிசளித்து அக்கலைஞரை பெருமைப்படுத்தினார். இந்த விழாவினை நினைவு கூர்ந்து சாவி மணிவிழா மலரில், "இசையிலே-அதுவும் கர்நாடக இசையிலே- சாவி மிகுந்த நாட்ட முடையவர். பல்வேறு இசைக் கலைஞர்களின் தனித்திறமைகள் பற்றி அவருக்குத் தெரியும். இசையின் நுட்பங்களைப் பற்றி மிகத் தெளிவான அபிப்ராயங்களை அவர் கொண்டிருந்தாலும், இசை 315

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/341&oldid=824817" இலிருந்து மீள்விக்கப்பட்டது