பக்கம்:சாவி-85.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் 'கல்கி ராஜேந்திரன் கூறுகிறார்: "மூப்பனார் அவர்கள் தலைமையில் நூற்றாண்டு விழாக் குழுவில் சாவி அருமையாகப் பணியாற்றினார். மிகச் சிறந்த யோசனைகளைக் கூறியதுடன் கல்கி நூற்றாண்டு விழாக்கள் பலவற்றில் பங்கேற்றார். வேறு எந்த ஒரு எழுத்தாளருக்கும் இல்லாத விதத்தில் மிகச்சிறப்பாக தமது குருநாதருக்கு இந்தியப் பெருநகரங்கள் பலவற்றில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் விழாக்கள் எடுக்கப்ப்ட்டதைக் கண்டு மனம் பூரித்தார். நூற்றாண்டு தொடக்க விழா 09.09.1998ல் ஏற்பாடாகியிருந்தது. அன்று சாவி அவர்களின் வாழ்க்கையில் ஒரு பேரதிர்ச்சி இடியாய் வந்து இறங்கியது. அவரது வாழ்நாள் சேமிப்பு முழுவதும் ஒரு நிதி நிறுவனத்துடன் சேர்ந்து மூழ்கிப் போயிற்று. அன்று பகல் ஒரு மணிக்கு இந்தச் செய்தி அவர் காதுக்கு எட்டியது. ஆனாலும் அதற்காக இடிந்து போகாமல் புன்னகையுடன் அந்த இடியைத் தாங்கிக் கொண்டார். அதுமட்டுமல்ல; அன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற்ற விழாவுக்கு வந்து, சிறிதும் கலங்காமல் மேடையேறி, அற்புதமாகப் பேசி அமரர் 'கல்கி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இப்படிப் பல சோதனை யான சந்தர்ப்பங்களில் சாவி காட்டியிருக்கும் மனோதிடம் எனக்கு பிரமிப்பையும், அவரிடம் பெருமதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்துகிறது." சமீபகாலமாக சாவி அவர்கள் “ஞானபாரதி' என்ற அமைப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். கலைத் துறையிலும், பத்திரிகைத் துறையிலும் தங்கள் முத்திரைகளைப் பதித்த இசை, நடன, நாடக, எழுத்துக் கலைஞர்களைப் பாராட்டி ஆண்டு தோறும் பரிசளித்து ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமது நண்பர்கள் நாரத கான சபா ஆர்.கிருஷ்ணசாமி, கோபுலு, திருமதி சிவசங்கரி மற்றும் தமது மகள் திருமதி உமா பிரசாத் ஆகியோரை அறங்காவலர்களாகக் கொண்டு ஞானபாரதி 317

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/343&oldid=824819" இலிருந்து மீள்விக்கப்பட்டது