பக்கம்:சாவி-85.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. நண்பர்கள் வட்டம் எழுதும்போது மட்டுமின்றி சாதாரணமாக உரையாடும் நேரங்களிலும் இயல்பாக நகைச்சுவை இழையோடும் ஒரு பேற்றினைப் பெற்றிருப்பவர் சாவி, - எழுத்தாளர் பரணிதரன் சொல்வதுபோல "ஊனோடும் உதிரத்தோடும் ஊறிவிட்ட இத்தகைய நகைச்சுவை உணர்வு கொண்டவர்களால்தான் அகங்காரத்தையும், கோபத்தையும், துயரத்தையும், சுகத்தையும், இறப்பையும், பிறப்பையும், கண்ணிரையும், கட்டுக்கடங்காத மகிழ்ச்சியையும் சீர் படுத்தி, நெறிப்படுத்தி ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் சமமாக அமர்த்தி வாழ்க்கை ஒடத்தை உள்ளார்ந்த அமைதியுடன் செலுத்த முடியும்." சாவியால் அப்படிச் செலுத்த முடிகிறது என்பது உண்மை. சாவி இதழுக்கு பதில்கள் எழுதும்போது நான் பலமுறை அருகிலிருந்து கவனித்திருக்கிறேன். அஞ்சலட்டையில் எழுதப் பட்டிருக்கும் கேள்விகளைப் படித்ததும் சட்டென்று அவருக்குப் பதில் தோன்றும் வேகத்தைப் பார்க்க வேண்டும் அதே அஞ்சல் அட்டையில் அந்தக் கேள்விக்குக் கீழேயே தன் பதிலை நுணுக்கி எழுதி அப்படியே அச்சுக்கு அனுப்பி விடுவார். ஒவ்வொரு பதிலிலும் நகைச்சுவைக் கீற்று மின்னல் போல் பளிச்சிடும். - - பதில் ஒரே ஒரு வரியில்தான் என்றாலும் சாவி அதிலும் 319

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/345&oldid=824821" இலிருந்து மீள்விக்கப்பட்டது