பக்கம்:சாவி-85.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 ராசாராம் அவர்கள் ஒருமுறை டெல்லிக்குப் போயிருந்த போது சாவியும் அங்கே போயிருந்தார். அப்போது தனக்குத் தெரிந்த அரசியல் தலைவர்களிடமெல்லாம் (பட்நாயக், ஜகஜீவன்ராம் போன்றவர்களிடம்) சாவியை அழைத்துப் போய் அறிமுகப்படுத்தினார். சாவி தினமணி கதிரில் அவற்றை ஒரு புகைப்படக் கட்டுரையாக வெளியிட ராசாராமுக்கு வந்தது தலைவலி டெல்லியில் ராசாராம் தமக்காக ஏதோ ஒரு தனி லாபியை உருவாக்கிக் கொண்டு வருவதாக தி.மு.க. தலைமைக்குச் செய்தி எட்ட, தி.மு.க.விலிருந்து அவர் விலகுவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. - நேரம் கிடைக்கும்போது ராசாராம் அவர்கள் சாவி வீட்டுக்கு வருவதும், ராசாராம் இல்லத்துக்குச் சாவி போவதும் இன்றும் வாடிக்கை. சாவியின் எண்பத்தைந்தாவது பிறந்த நாளான இந்த ஆண்டு ஆகஸ்டு பத்தாம் தேதியன்று ராசாராம் சாவியின் வீட்டுக்கு வந்து சால்வை போர்த்தி வாழ்த்தியதும், அதே மாதம் இருபத்தாறாம் தேதியன்று ராசாராம் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சாவி அவரை வாழ்த்திப் பேசியதும் ஒரு நீண்ட கால நட்பின் ஆழத்தை உணர்த்தும் செயலே. அதேபோல சாவியின் உள்வட்ட நண்பர்களில் மிகவும் முக்கியமானவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். கவிஞரின் தமிழில் சாவி சொக்கிப் போவார். அவர் இல்லாத சமயங்களில் பல முறை என்னிடம் ‘எப்படி ஸார் வைரமுத்துவுக்கு மட்டும் தமிழ் இவ்வளவு அழகா வருது அடாடா...' என்று வியந்து பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் சாவியின் கேள்வி- பதில்களைப் படித்து ரசிக்கத் தவறியதில்லை. சாவியின் வேதவித்து நாவலுக்கு தாம் எழுதிய 322

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/348&oldid=824824" இலிருந்து மீள்விக்கப்பட்டது