பக்கம்:சாவி-85.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் பெங்களுர் நீல்கிரீஸ் அதிபர் சென்னியப்பன் சாவியின் குடும்ப நண்பர். நீல்கிரீஸ் போய் சென்னியப்பனைப் பார்க்காமல் ®(5ಹಿಟ್ಟೀಗ್ಲು சாவியின் பெங்களுர்ப் பயணம் எதுவும் முழுமை அடைந்ததில்லை. "பிரிகேட் ரோடில் ஒரு மூலையில் மிகச் சிறிய அளவில் நாங்கள் நீல்கிரீஸ் தொடங்கியபோதே சாவியும் அவரது மனைவியும் இங்கே வந்து சாமான்கள் வாங்கிப் போயிருக்கிறார்கள். அப்போதுதான் சாவியின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது என்று நினைவு அலைகளில் மூழ்கிப் போகிறார் திரு. சென்னியப்பன். 'எங்கள் வளர்ச்சியில் சாவியின் பங்கு மகத்தானது. ஈரோடில் எங்களது டெய்ரி ஃபார்ம் பற்றி சாவி விகடனில் ஒரு கட்டுரை எழுதி பிரபலப்படுத்தினார். நான் என் சகோதரர்கள் மணி, ராஜா மூவரும் நீல்கிரீஸ் வளர்ச்சியில் இணைந்து இயங்கும் பாங்கினை ஒரு நல்ல காபிக்கு ஒப்பிட்டு சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட பால் - டிகாக்ஷன் - சர்க்கரை போன்று இந்த மூவரும் என்று சாவி ஒருமுறை ஈரோடு நீல்கிரீஸ் நிகழ்த்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியதை நான் இப்போதும் நினைத்துப் பார்த்து ரசிப்பண்டு. எங்கள் நீல்கிரீஸ் கடைக்குக் கலைஞரை ஒருமுறை அழைத்து வந்து எங்களைப் பெருமைப்படுத்தியவர் சாவி. அதேபோல் காமராஜரிடமிருந்து எங்கள் தரமான வெண்ணெய் மற்றும் இதர பொருட்கள் பற்றிப் பாராட்டி எழுதியுள்ள சர்டிபிகேட் வாங்கித் தந்தவரும் அவர்தான். விகடனிலும், கதிரிலும், சாவியிலும் எங்களைப் பற்றி சாவி எழுதிய எழுத்துக்கள் எங்கள் மீது போட்ட வெளிச்சம்தான் நாங்கள் இந்த அளவுக்கு முன்னேறப் பின்னணி பலமாக அமைந்தது' என்று மகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார் சென்னியப்பன். 325

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/351&oldid=824828" இலிருந்து மீள்விக்கப்பட்டது