பக்கம்:சாவி-85.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 கோவையில் உள்ள பல வர்த்தகப் பிரமுகர்களும், தொழில் அதிபர்களும் சாவியின் நீண்ட கால நண்பர்கள். அவர்களில் சாவியிடம் மிகுந்த அன்போடு பழகிய அசோகா பாக்கு உரிமையாளர் திரு. கிருஷ்ணா செட்டியார் முக்கியமானவர். சாவியின் மகன் பாச்சா கோவையில் ஜி.டி.நாயுடுவிடம் தொழில் கல்வி பயின்ற ஓராண்டு காலம் அசோகா கிருஷ்ண செட்டியார் அவர்கள் வீட்டில்தான் தங்கியிருந்தார். செட்டியார் அவர்களின் புதல்வர்கள் குப்புராஜ், அனந்த் இருவரும் அந்த நட்புறவை மறவாமல் தொடர்ந்து பழகி வருவதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறார் சாவி. சென்னையில் முக்கிய தொழிலதிபர்கள் பலர் சாவியின் நண்பர்கள். அவர்களில் திரு. ஒபுல் ரெட்டியும், திரு. டி.டி.வாசுவும் ரொம்ப நெருக்கம். * 'பாண்ட்ஸ் பலராமன் அவர்கள் சாவியின் உற்ற நண்பர். சாவியின் நகைச்சுவைப் பேச்சு, எழுத்து இரண்டையும் ரசித்துப் பாராட்டுவார். சாவி அவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். சாவி இதழ் இரண்டாவது முறை தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். திரு. பலராமன் அவர்கள் தமக்குச் செய்துள்ள பேருதவிகளை சாவி மிகப் பெருமையோடு அடிக்கடி சொல்லிப் பெருமைப்படுவதுண்டு. திரு. பலராமன் அவர்களின் மனைவி திருமதி சாந்தி பலராமனும் சாவியின் எழுத்துகளைப் படித்து ரசிப்பவர். சாவி குடும்பத்தாருடன் அன்போடு பழகி வருபவா. நாரத கான சபாவின் செயலாளரும், சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர்களில் ஒருவருமான ஆர்.கிருஷ்ண சாமியின் மீது சாவிக்கு மிகுந்த மதிப்பும் அன்பும் உண்டு. வாரம் ஒரு முறையாவது இருவரும் சந்தித்து நாட்டு நடப்பு பற்றிப் பேசி, விவாதித்து தெளிவு காணத் தவறுவதில்லை. 326

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/352&oldid=824829" இலிருந்து மீள்விக்கப்பட்டது