பக்கம்:சாவி-85.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் உண்மைதான். சாவி இதழில் அர்த்தநாரி பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மவுண்ட் பேட்டன் பிரபு மரணமடைந்த சமயம் சாவியில் ஒரு கட்டுரை எழுதியபோது தான் அடைந்த உணர்வுகளை அர்த்தநாரி இங்கே சொல்கிறார்: "சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் சுதந்திரம் என்ற பிரபலமான ஆங்கிலப் புத்தகத்தைப் பற்றிப் படித்தது நினைவுக்கு வந்தது. அதில் மவுண்ட் பேட்டன் நேரு, திருமதி மவுண்ட் பேட்டன் இவர்களைப் பற்றிப் படித்தவற்றை சாவியுடன் விமரிசித்துக் கொண்டிருந்ததும் நினைவுக்கு வந்தது. இருந்தாலும் இதற்கு முன் பத்திரிகையில் எழுதிப் பழக்கமில்லாத என்னைப் பார்த்து சாவியிலே ஒரு பக்கம் வரணும். கார்த்தாலே ரெடியா இருக்கனும் என்று சொல்லிவிட்டு ஆசிரியர் காவி பதில்கள் எழுதுவதில் முனைந்து விட்டார். மவுண்ட் பேட்டன் உயிரோடு இருந்தபோது எங்களுக்குள் பரிச்சயமில்லை. அப்படி இருக்க எங்கே அவருக்காகக் கண்ணிர் விட்டு எழுதுவது? எழுத வேண்டுமே என்றுதான் கண்ணிர் வந்தது. மீண்டும் நள்ளிரவில் சுதந்திரத்தைத் தேடிப் போனேன். இரவு முழுக்கப் படித்துக் கொண்டிருந்தேன். மவுண்ட்பேட்டன் செய்த காரியத்தை நினைத்துக் கோபம் கோபமாக வந்தது. இப்படி திடீரென்று மண்டையைப் போட்டதும் இல்லாமல் என்னையும் மாட்ட வைத்து விட்டாரே என்று. துக்கத்தில் எழுதவே வரமாட்ட்ேன் என்கிறது என்று சொல்லி தப்பித்து விடலாமா என்று புத்திசாலித்தனமாக மூளை வேலை செய்தது. அது எவ்வளவு முட்டாள்தனமான யோசனை' என்று ஆசிரியர் கோபத்துக்கு அடிக்கடி அறிமுகமாகி இருந்த இன்னொரு மனம் சொன்னது. எனக்கு நானே அழுது கொண்டிருப்பதை விட்டுவிட்டு மவுண்ட்பேட்டன் மறைவுக்கு, தமிழகத்தையே எப்படி அழி 333

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/359&oldid=824836" இலிருந்து மீள்விக்கப்பட்டது