பக்கம்:சாவி-85.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 ஒருநாள் அந்தப் போஸ்டரை உற்றுப் பார்த்தபோது அதில் அந்த சங்கத்தின் முகவரி போட்டிருந்தது. விசுவநாதன் மூளையில் 'பளிச்சென்று ஒரு யோசனை! ஐயா... உங்கள் சுவரொட்டிகளைக் கொஞ்சம் எனக்கு அனுப்பி வைத்தால் நான் இங்கே எல்லா ஊர்களிலும் ஒட்டுவேன். ஆடு மாடுகளே சொல்வது போன்ற கருத்து எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது' என்று அந்த முகவரிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினான். உடனடியாக, கட்டுக்கட்டாய் அந்த வண்ணச் சுவரொட்டிகள் விசுவநாதனுக்கு தபாலில் வந்து சேர்ந்தன. அட, இந்தச் சின்னப் பையனுக்கு இவ்வளவு தபாலா? பெரிய ஆள்தான் போலிருக்கிறது என்று தபால்காரருக்கு விசுவ நாதன் மீது ஒரு மரியாதையே ஏற்பட்டு விட்டது. உண்மையில் அந்தச் சுவரொட்டிகளை எல்லா இடங்களிலும் ஒட்ட வேண்டும் என்ற ஆசையை விட, அதைக் கையில் வைத்துக் கொண்டு 'குளோஸ்-அப்"பில் கலர்களைப் பார்த்து ரசிக்கலாமே என்ற ஆசைதான் அவனுக்கு அதிகமாக இருந்தது. ரசித்தான். கூடவே அதிலுள்ள ஆடு, மாடு, கோழி போலவே வரைந்து பார்த்து மகிழ்ந்து போனான். வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும், தனக்குப் படிப்பறிவு போதாது... நாலாங்கிளாஸ் எதற்கும் உதவாது என்ற வருத்தம் விசுவநாதனுக்கு இல்லாமல் போகவில்லை. இந்த வருத்தம் ஒரு நாள் விசுவரூபம் எடுத்தது. எப்படியும் மேலே படித்தே தீருவது என்று உறுதி எடுத்தான். கடைசியில் ஒரு நாள் கேட்டே விட்டான். "அம்மா... நான் ஆரணியில் போய் படிக்கட்டுமா?" ஆரணியில் விசுவநாதனின் பெரியம்மா - ஜானகி என்று பெயர் - குடும்பத்துடன் வசித்து வந்தார். 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/36&oldid=824837" இலிருந்து மீள்விக்கப்பட்டது