பக்கம்:சாவி-85.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் தேர்ந்த புகைப்படக் கலைஞர். அவர் எடுத்த பல படங்கள் இனமணி கதிர் போன்ற தமிழ்ப் பத்திரிகைகளின் அட்டைகளை ஆலங்கரித்திருக்கின்றன. டெலிவிஷனுக்காகச் சில நிகழ்ச்சிகளையும் வீடியோ காமிராவில் படமெடுத்துக் கொடுத்திருக்கிறார். தந்தையாருடன் பலமுறை வெளிநாடுகளுக்குப் போய் வந்திருக்கிறார். கலைஞர், காமராஜர் போன்ற தலைவர்களைப் படம் எடுத்த அனுபவமும் பாச்சாவுக்கு உண்டு. ஜப்பான், தாய்லாந்து, பங்களாதேஷ் முதலிய நாடுகளுக்குப் பயணம் செய்து எடுத்துள்ள படங்கள் ஏராளம். பங்களாதேஷ் சுதந்திரம் பெற்ற நேரத்தில் பிரதமர் முஜிபுர் ரஹ்மான் அவர்களை இவர் எடுத்த படங்கள் தினமணி கதிரில் வெளியாயின. கலைஞர் அவர்களைப் பல சந்தர்ப்பங்களில் பல கோணங்களில் பாச்சா எடுத்த படங்கள் கலைஞர் அவர்களாலேயே பாராட்டுப் பெற்றவை. இன்று பாச்சா தமது மனைவி சீதா, மகள் ரம்யாவுடன் அமெரிக்காவில் வசதியாக வாழ்ந்து வருகிறார். மூவருமே அமெரிக்க வாழ்க்கைக்குப் பழக்கமாகி விட்டார்கள். பாச்சாவின் மனைவி சீதா மிக நன்றாகப் பாடுவார். மகள் ரம்யா பரத நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றவர். இப்போது அமெரிக்காவில் நியூஜெர்ஸியில் தன் படிப்புக்கு இடையே நேரம் கிடைக்கும்போதெல்லாம் ரம்யாவின் சலங்கை ஒலித்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு மகன் மணி. பாச்சாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் செட்டில் ஆனவர். பாச்சாவை அமெரிக்காவுக்கு அழைத்துக் கொண்டவரும் அவர்தான். “இங்கே நானும், என் மனைவியும் வயதான காலத்தில் தனியே இருக்க வேண்டிய சூழலில், வயதாகிவிட்ட எங்களுடன் இருந்து உதவி செய்ய விரும்பியதால், இந்தியாவுக்கே திரும்பி வந்து விட்டான். இப்போது அவன் எங்களுடன் இருப்பது 337

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/363&oldid=824841" இலிருந்து மீள்விக்கப்பட்டது