பக்கம்:சாவி-85.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது" என்கிறார் சாவி, மணிக்குத் திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். பெயர் வருண். அமெரிக்காவில் அம்மாவுடன் தங்கி கம்ப்யூட்டர் படித்து வருகிறான். சாவி இதுவரை தன் குடும்பத்தினருக்கென யாரிடமும் எந்தப் பரிந்துரைக்கும் போனதில்லை. அதே சமயம் பிறருக்காக சிபாரிசு தேடி அலையவும் தயங்கியதில்லை. "நான் பி.யு.சி. முடித்து, கஷ்டப்பட்டு ஒரு சிபாரிசும் இல்லாமல் ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்.ஸி. சேர்ந்தேன். அப்பா ஒரு உதவியும் செய்யவில்லை. ஒரு வாரம் கழித்து என் சினேகிதி சாந்தி (தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் சர்க்கரை மன்றாடியாரின் மகள்) உன் அப்பா இன்று காலை என் வீட்டுக்கு வந்திருந்தார். யாருக்கோ அட்மிஷன் விஷயமாக என் அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தார் என்றாள். எனக்கு எப்படி இருந்திருக்கும்? கஷ்டப்பட்டு என் கோபத்தை அடக்கிக் கொண்டேன்' என்று சாவியின் மகள் ஜெயந்தி சொல்வதைவிட வேறென்ன சான்று வேண்டும்? தன் மனைவி, மகள்கள், மகன்கள், மாப்பிள்ளைகள், மருமகள் இந்த வட்டத்தை விட்டால் சாவி அதிகமாக நேசிக்கும் குடும்ப உறுப்பினர் தம் சகோதரியின் மகன், அன்புக்குரிய மருமான் சந்திரமெளலிதான். "நான் மாமாவிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். நேரம் தவறாமை, வரும் கடிதங்களுக்கு அன்றே பதில் எழுதுவது போன்றவை அவற்றில் சில. அவருடைய நண்பர்கள் வட்டம் மிகப்பெரிது. அரசியல் தலைவர்கள், இசைக் கலைஞர்கள், வியாபாரப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர் 338

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/364&oldid=824842" இலிருந்து மீள்விக்கப்பட்டது