பக்கம்:சாவி-85.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. இருதய ஆபரேஷன் இன்று வரை சாவி நோய் நொடி என்று பெரிதாகப் படுத்ததில்லை. எனினும் நீண்ட காலமாகவே அவரை விட்டுப் பிரியாத ஒரு நண்பர் உண்டு. அவர் திருவாளர் டயாபடீஸ், தமக்கு சர்க்கரைக் குறைபாடு இருப்பதை சாவி ஒரு பொருட்டாகவே என்றும் கருதியதில்லை. பெரிய அளவில் ஒரு சுகவீனம் என்றால் அது 1985ஆம் ஆண்டு சாவிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைதான். ஆபரேஷனுக்குச் சில மாதங்கள் முன் சாவி பெங்களூர் போயிருந்தபோது இருதயத்தில் லேசாக வலித்தது. இருதயத்தில் ஏதோ பிரச்னை என்பதற்கான அறிகுறியை சாவி அன்றுதான் உணர்ந்தார். சென்னை வந்ததும் டாக்டர் ஆர்.எஸ்.ராஜகோபாலனைப் பார்த்தார். 'ஹார்ட் டிரபிள்தான். சந்தேகமில்லை என்றது கார்டியோ கிராம். பிறகுதான் அப்பல்லோ போய் ஆபரேஷன் செய்து கொண்டார். அந்த ஆபரேஷனையும் அவர் எவ்வளவு லேசாக எடுத்துக் கொண்டார் என்பதற்கு அவர் தமக்கு நடந்த ஆபரேஷன் பற்றி குமுதம் வார இதழில் எழுதிய கட்டுரையே சான்று. e - - - е е е அறையை விட்டு ஆபரேஷன் தியேட்டருக்குக் 340

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/366&oldid=824844" இலிருந்து மீள்விக்கப்பட்டது