பக்கம்:சாவி-85.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. சாவி - இன்று வயது என்பது சாவியைப் பொறுத்தவரை காலண்டர் காட்டுகிற வெறும் குறிப்புதான். வயது அவரை - அவரது இளமையான சிந்தனையை - மாறிவரும் உலகின் புதுப் புது நியதிகளோடு தன்னையும் பொருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை - மாற்றியதே இல்லை. சென்ற ஆண்டு அமெரிக்கா போய் மகன் பாச்சாவுடன் ஒரு மாதம் இருந்து விட்டு வந்தவுடன் என்னிடம் சொல்கிறார்: 'தெரியுமா உங்களுக்கு? இப்போ நானே தனியா ஈ.மெயில் அனுப்ப கத்துக்கிட்டேன்." எண்பத்தைந்து வயதில் கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ளும் ஆர்வம்! நானும் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டு வருகிறேன். அன்று பார்த்த அதே உற்சாகம், ஆர்வம் இன்றும் அவரிடம் கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. காலையில் எட்டு மணிக்கு அவர் வீட்டுக்குப் போவேன். அதற்குள் எழுந்து தன் காலைக் கடன்களையெல்லாம் முடித்து, குளித்து பூஜை செய்த பின்னர் அலுவலகத்துக்குப் போகத் தயாராக இருக்கும் இளைஞன் போல சுத்தமாக உடையணிந்து காலை தினசரிகளைப் படித்துக் கொண்டிருப்பார். உலக நடப்புகளில் தீவிர ஆர்வம் காட்டுகிறார். முக்கிய 345

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/371&oldid=824850" இலிருந்து மீள்விக்கப்பட்டது