பக்கம்:சாவி-85.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் ஆர்.கே.மாமா (ஆர்.கல்யாண சுந்தரம் ஐயர்) அவனைத் தேடி வந்து அன்றிரவே சென்னைக்குத் திரும்ப அழைத்துப் போனது தனிக் கதை. "பையன் திரும்பி வந்து விட்டான் என்று அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மகிழ்ச்சி பிடிபடவில்லை. தடபுடலாக விருந்துக்கு ஏற்பாடு செய்து மகன் கிடைத்த மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டார். விருந்துக்கு வந்த ஒருவர் பையனைத் தனியாக அழைத்து, அம்பீ... நீ அடிக்கடி இப்படி காணாமல் போய்க் கொண்டிரு! அப்போதுதான் எங்களுக்கு இந்த மாதிரி சாப்பாடு கிடைக்கும்’ என்று ஜோக் அடித்ததை விசுவநாதன் இன்னும் மறக்கவில்லை. 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/43&oldid=824859" இலிருந்து மீள்விக்கப்பட்டது