பக்கம்:சாவி-85.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 3. எழுத்தாளர் ஆனது எப்படி? வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை உயர்நிலைப் பள்ளியில் அப்போது ஆசிரியராக இருந்த ராமநாதன் என்பவருக்கும் விசுவநாதனைப் போலவே விளம்பர போர்டுகளின் மீது தீராத காதல் இருந்தது. போர்டுகள் எழுதுவதில் அவர் வல்லவ ராகவும் இருந்தார். விசுவநாதனின் போர்டு எழுதும் ஆசை, ஏற்கனவே ராம நாதனுடன் இருந்த நெருக்கத்தை மேலும் அதிகமாக்கியது. அந்த நெருக்கம் இரண்டு பேருமே ஒன்றாக இணைந்து போர்டு எழுதும் தொழிலை மேற்கொள்ளும் அளவுக்கு வளர்ந்தது. பகல் நேரங்களில் ராமநாதன் சுற்றி அலைந்து ஆர்டர் பிடித்து வருவார். இரவு நேரங்களில் அவருக்குக் கூடமாட ஒத்தாசை செய்வது விசுவ நாதனுடைய வேலை. மண்ணடி ராமசாமி தெருவில், ஒரு மொட்டை மாடியில் இவர்களின் விளம்பர நிறுவனம் செயல்பட்டது. விசுவநாதனுக்கு இந்தத் தொழிலின் மூலம் அவ்வப்போது கொஞ்சம் வருமானம் கிடைக்கும். அதில் ஒரு பகுதி சிற்றுண்டிக்கும்,இன்னொரு பகுதி சினிமாவுக்கும் செலவாகிவிடும். சின்ன வயதிலிருந்தே சினிமா பார்க்கும் வழக்கம் விசுவநாதனுக்கு அதிகம் இருந்தது. கூத்து பார்த்த கண்கள் ஆயிற்றே! அப்போது செலக்ட் தியேட்டர் சென்னையில் ரொம்பவும் பிரசித்தம். அதன் முதலாளி பட்டேல் என்பவருக்குச் சொந்தமாக 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/44&oldid=824860" இலிருந்து மீள்விக்கப்பட்டது