பக்கம்:சாவி-85.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் செய்ய ஆசை என்று தன் விருப்பத்தை வெளியிட்டான். முதலாளி சில வினாடிகள் யோசித்து விட்டு எந்தக் கேள்வியும் கேட்காமல் உள்ளே ஒரு நாற்காலியைக் காட்டி சரி, அங்கே போய் உட்கார் என்றார். - நம்பவே முடியவில்லை. பத்திரிகை ஆபீஸில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவு நிறைவேறியதில் விசுவநாதன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அங்கே முனுசாமி என்று ஒரு கம்பாஸிடர். அவர்தான் விசித்திரனில் எல்லாம். பத்திரிகை ஆபீஸுக்குள் புகுந்து விட்ட விசுவநாதனுக்குள் ஒரு கேள்வி குடைந்து கொண்டே இருந்தது. 'சம்பளம் எவ்வளவு கொடுப்பார்?" ஒரு மாதம் ஆயிற்று. உரிமையாளர் முன் போய் சம்பளம் பற்றி தாழ்ந்த குரலில் கேட்டான். “முனுசாமி கிட்ட சொல்லியிருக்கேன். முதல்ல இருபத்தஞ்சு வாங்கிக்கோ. அப்புறம் உன் வேலையைப் பார்த்துக் கூட்டித் தரேன்' என்றார் முதலாளி. அடேயப்பா ! இருபத்தைந்து ரூபாயா மாதச் சம்பளமா! அடிசக்கை என்று மனம் குதூகலித்தது. முனுசாமியிடம் போய்க் கேட்டான். 'என்னது இருபத்தைந்து ரூபாய் என்றா சொன்னார்?' என்று முனுசாமி ஆச்சரியப்பட்டார். முதலாளி தன் இடத்திலிருந்து குரல் கொடுத்தார். 'முனுசாமி ஒரு இருபத்தஞ்சு எடுத்து கொடுப்பா என்றார் முதலாளி. 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/47&oldid=824863" இலிருந்து மீள்விக்கப்பட்டது