பக்கம்:சாவி-85.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் தண்ணிர்ப் பந்தல்' என்று சொல்வார்கள். காலையில் எட்டரை மணியிலிருந்து அங்கே புளியோதரை, தயிர் சாதம், இட்லி, வடை, தோசை எல்லாம் கிடைக்கும். தினமும் பகல் நேரத்தில் விசித்திரன் அலுவலகத்திலிருந்து அங்கே போய் தண்ணீர் மட்டும் வாங்கி வயிறு நிரம்பக் குடித்துவிட்டு வெளியே வருவேன். அப்போது அங்கே வைக்கப்பட்டிருக்கும் அத்தனை அயிட்டங்களையும் ஆசை தீரப் பார்த்து விட்டு அவ்வளவையும் சாப்பிட்ட மாதிரி என்னை நானே ஏமாற்றிக் கொண்டு பசி மறப்பேன்" என்று அந்த நாட்களை எண்ணி உணர்ச்சி வசப்படுகிறார் சாவி. 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/49&oldid=824865" இலிருந்து மீள்விக்கப்பட்டது