பக்கம்:சாவி-85.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் செக்கு மேடு போலீஸ் ஸ்டேஷன். கினிமா சென்ட்ரல் வழியாக தங்கசாலைத் தெருவை அடைந்தான். அப்போது விகடன் அலுவலகம் 24, தங்கசாலைத் தெருவில் இருந்தது. அது திண்ணையுடன் கூடிய ஒரு சின்ன வீடு. வாசலில் ஒரு குப்பைத் தொட்டி, கூடத்தில் கம்போஸிங் கேஸ்கள் இரண்டு. கம்பத்துக்கும் சுவருக்கும் இடையே உள்ள சின்ன இடத்தில் குட்டி நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தார் அந்த கம்பீரமான மனிதர். நாலணாவை அவரிடம் தந்து தீபாவளி மலர் வேணும்' என்று கேட்டான். உள்ளே போய் தீபாவளி மலர் ஒன்றை எடுத்து வந்து தூசி தட்டிக் கொடுத்தார் அந்த கம்பீர மனிதர். அவர்தான் எஸ்.எஸ்.வாசன் என்பது அப்போது அவனுக்குத் தெரியவில்லை. பிற்காலத்தில்தான் தெரிந்து கொண்டான். விசித்திரன் பத்திரிகையில் சாவி வேலை பார்த்தபோது சம்பளம் சரியாகக் கிடைக்காவிட்டாலும் பல முக்கிய மனிதர்களின் அறிமுகமும், அன்பும் கிடைத்தன. அவர்களில் ஒருவர் தி.ஜ.ரங்க நாதன் (தி.ஜ.ர.). சாவிக்கும் அவருக்குமிடையே தொடங்கிய நட்பு வளர்ந்து பாசமாகவே மாறியிருந்தது. விசித்திரனுக்குப் பிறகு சந்திரோதயம்' பத்திரிகையில் சேர்ந்து ஒரு வருடம் வேலை செய்தபின் சாவி சும்மா இருந்த நாட்களில் தாம் தங்கியிருந்த ஒட்டல் அறையில் அவரையும் தங்கவைத்து ஆதரவு தந்தார் தி.ஜ.ரங்கநாதன். அப்போது திரு. சதாசிவம், ஆர்.பார்த்தசாரதி, துமிலன், றாலி, ரா.அ.பத்ம நாபன் ஆகிய ஐந்து பேரும் விகடனிலிருந்து விலகி ஹநுமான் என்ற பெயரில் 'கேசரி பிரிண்ட்டிங் ஒர்க்ஸ் அதிபர் சுந்தரம் ஐயருடன் சேர்ந்து புதிதாக வாரப் பத்திரிகை ஒன்று தொடங்கி மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தார்கள். பத்திரிகை தொடங்கிய ஒரு வருடத்துக்குள்ளாகவே 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/51&oldid=824868" இலிருந்து மீள்விக்கப்பட்டது