பக்கம்:சாவி-85.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் சைஸில் வெளியாயிற்று. புகைப்படங்களைப் பெரிய பெரிய பிளாக்குகளாகச் செய்து அச்சிடுவார்கள். அவை பலமுறை பயன் படுத்தப்பட்டு கறுப்பு மசியால் அழுக்குப் படர்ந்து எது எந்தப் படத்தின் பிளாக் என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒர் இருட்டறையில் குவிந்து கிடக்கும். சாக்பீஸ் அல்லது பவுடர் தடவிப் பார்த்தால்தான் ஓரளவு கண்டுபிடிக்க முடியும். அப்போதும் நிச்சயமாகத் தெரியாது. பிளாக்குகள் தேடித் தரும் பொறுப்பு சாவியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் ஏதோ ஒரு படத்தின் பிளாக்கைத் தேடிக் கொண்டு வரும்படி ஆசிரியர் சங்கு சுப்பிர மணியம் சாவியைப் பணித்தார். பிளாக்குகள் குவிக்கப்பட்டிருந்த இருட்டறையில் போய்த் தேடி, ஏதோ குழப்பத்தில் ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை அருகே உள்ள செஞ்சதுக்கத்தின் பிளாக்கைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டார். அது அப்படியே தவறான தலைப்பின் கீழ் பிரசுரமாகி விட்டது. சங்கு சுப்பிரமணியத்துக்கு வந்ததே கோபம்! சாவியைக் கோபாவேசமாகத் திட்டித் தீர்த்து விட்டார். அதே கோபம் சாவிக்கும் வந்தது. 'நான் முதன் முதல் கோபக்காரன் ஆனது அப்போதுதான்' என்கிறார் சாவி. தன் கையில் இருந்த பிளாக்கை சங்கு சுப்பிரமணியம் அவர்களின் கண்ணாடி பதித்த மேசை மீது படீர் என்று வீசி அடித்தார். கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கிப் போயிற்று. அன்றே சாவியின் வேலையும் போய் விட்டது. மீண்டும் வேலையில்லா இளைஞனாக சென்னையைச் சுற்றிக் கொண்டிருந்தார். தி.ஜ.ர.வின் ஆதரவு மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. தம்முடைய நண்பர் வேலையில்லாமல் திண்டாடிக் 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/53&oldid=824870" இலிருந்து மீள்விக்கப்பட்டது