பக்கம்:சாவி-85.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் முதல் நாள்தான் எல்லோரும் கும்பலாகப் பேசிக் கொண்டிருந்தனர். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒவ்வொருவர் வீட்டிலும் எப்படி எல்லாம் கொண்டாடுவார்கள் என்று அவரவர் அனுபவங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். போன வருடம் பிள்ளையார் சதுர்த்திக்கு என் வீட்டில் கொழுக்கட்டை சாப்பிட்டேன். ஹாலம், இந்த வருடம், 'சதுர்த்தியாவது பண்டிகையாவது? புழு நெளியும் கஞ்சிதான்!” என்று சொல்லி சாவி பெருமூச்சு விட்டார். மறுநாள் பொழுது விடிந்ததும் கைதிகள் எல்லோரும் வழக்கம்போலக் கஞ்சி சாப்பிட்டுவிட்டு ஆங்காங்கே மரத்தடியில் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திங்கட்கிழமை காலை ராகு கால நேரம். திடீரென இடைவிடாத பயங்கரமான விசில் சப்தம். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதை எளிதில் யூகிக்க முடிந்தது. சிறையைச் சுற்றிலும் ரிசர்வ் காவல் படை அணி வகுத்து நிற்க, எல்லோரும் பிளாக்குக்குள் ஒடுங்க... ஜெயிலையா உடைக்கப் போlங்க? இதோ, இப்ப உங்க மண்டையை உடைக்கிறோம் பாருங்க...' என்ற கூச்சலுடன் சிறை வார்டர்கள் வெறித்தனமாகச் சீறிக்கொண்டே அனைவரையும் ஒட ஒடத் துரத்தி லத்தி சார்ஜ் செய்தார்கள். அப்போது அங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் இருந்தார்கள். எல்லோரும் பயத்தில் தலை தெறிக்க ஒடி அவரவர் பிளாக்குகளுக்குள் புகுந்தார்கள். ஹெள துரை கையில் பிரம்புடன் ஒரு ராட்சசன் போல் காட்சி அளித்தான். வார்டர்களைப் பார்த்து அடி, நொறுக்கு என்று கீச்சுக் குரலில் உத்தரவிட்டுக் கொண்டிருந்தான். - அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது. காங்கிரஸ் கைதிகள் அடித்து நொறுக்கப்பட்டனர். சிறைச்சாலையே ரத்தக்களறி ரணக்களறி ஆகிக்கொண்டிருந்தது. சாவி ஓடிக் கொண்டிருந்த போது, ஒரு வார்டர் அவரைத் துரத்தி வந்து ஓங்கி ஓர் அடி 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/67&oldid=824885" இலிருந்து மீள்விக்கப்பட்டது