பக்கம்:சாவி-85.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் அவர்களிடம் சாவி சொல்லவே இல்லை. நேரில் அவர் முகம் பார்த்துச் சொல்லும் தீரம் அவருக்கு வரவில்லை. ‘'எத்தனை நாள் அவரோடு சென்று ஒட்டலில் சாப்பிட்டிருப்பேன்? அந்த உப்பு என் நெஞ்சுக்குள் உறுத்தியது. அப்படிச் சொல்லாமல் போனது மிகப் பெரிய தவறு என்ற குற்ற உணர்வு என்னை இன்னமும் வாட்டிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் ஆதித்தனார் அவர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் மதுரை விமானக் கூடத்தில் சந்தித்தபோது இதுபற்றி அந்தப் பெருந்தகையாளர் எதுவுமே பேசவில்லை. 'உங்க கட்டுரைகளைப் படிக்கிறேன். ரொம்ப நன்றாக எழுதுகிறீர்கள்' என்று மட்டும் பாராட்டினார். அவருடைய பெருந்தன்மையான பேச்சு என்னை மேலும் வாட்டியது' என்று சாவி அந்தப் பழைய நினைவில் நனைந்து வருத்தப்படுகிறார். 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/75&oldid=824894" இலிருந்து மீள்விக்கப்பட்டது